திமுக அரசு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளால் தொடர்ந்து சர்ச்சையின் நடுவில் திகழ்கிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆட்சி, குற்றமில்லா தமிழகம் என்று தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தாலும், கொலை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களின் அதிகரிப்பு, எதிர்க்கட்சிகளின் மிகுந்த விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.
குற்றச்சம்பவங்களை தடுக்க எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் கூட ஆங்காங்கே கொலை குற்றங்கள் நடைபெற்று தான் வருகிறது. அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள், திமுக அரசை குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. தண்டனைகள் கடுமையாக இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தமிழகத்தில் குறையும் என்றும் அமைதி நிலை ஏற்படும் என்றும் கருதுகின்றனர். தினமும் கொலை,கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பான செய்திகளே,செய்தி தாள்களை அலங்கரித்துக் கொண்டிருப்பதாக அதிமுக விமர்சித்து உள்ளது.
இதையும் படிங்க: நீங்களும் தவெக போறீங்களா..? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பளிச் பதில்…!
இவை அனைத்தையும் பார்க்கும் தமிழ்நாட்டு மக்கள் மனதில் எழக் கூடிய கேள்வி ஒன்றுதான் என்றும் பொம்மை முதல்வரின் ஆட்சியில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா என்று கேள்வி எழுப்பி உள்ளது. எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு என்றும் அதிமுக சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: செங்கோட்டையனுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.... அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்...!