சென்னை, கொளத்தூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை ஒன்றுக்கு எதிராக 2025 ஜூலை 9 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம், இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் செயல்படும் கல்லூரிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கல்லூரிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டினர். இந்தக் கருத்து, கற்பகாம்பாள் கலைக்கல்லூரி உள்ளிட்ட இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்களை அவமதிப்பதாகக் கருதப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்லூரி வாயிலில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடவுள் காசில் கல்வி தருவது குற்றமா? என்ற கேள்வியை முன்வைத்து, எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்துக்கு பதிலளித்த தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, எடப்பாடி பழனிசாமி அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் என்று விமர்சித்தார். அவர் மேலும் கூறுகையில், வரலாறு தெரியாதவராகவும், கல்வி நிறுவனங்களை ஆதரித்த முன்னாள் தலைவர்களின் பங்களிப்பை அறியாதவராகவும் எடப்பாடி உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில், கல்விக்கான நிதியை ஒதுக்க அரசின் கல்வித்துறையில் பணம் இல்லையா என்ற எடப்பாடி பழனிச்சாமியின் ஒற்றைக் கேள்வி, நிதி மேலாண்மை சார்ந்தது என்று கூறியதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் திராணி இல்லாமல், வழக்கமான மடைமாற்று அரசியலை திமுக தீவிரப்படுத்துவதாகவும், அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் என கொடுத்த வாக்குறுதியை ஒழுங்காக நிறைவேற்ற வக்கில்லாமல், ஒடுக்கப்பட்டோருக்கான நிதியை அதற்காக எடுத்ததாகவும் அதிமுக குற்றம்சாட்டி உள்ளது.
இதையும் படிங்க: பாஜகவோட சேர்ந்தா அவ்வளவுதான்! நல்ல எண்ணத்தில் தான் பேசினேன்... இபிஎஸ்க்கு திருமா பதிலடி!

அதைப் போன்ற நிர்வாகத் திறமின்மையை கேள்வி எழுப்பினால், அய்யோ அம்மா என்று தங்கள் குருவான பொம்மை முதல்வரைப் போலவே சட்டையைக் கிழித்துக் கொண்டு முட்டாள் சீடர்களான கொத்தடிமைகள் அழுவதாகவும் காலேஜை மூடப் போறாங்க என்று போலி நாடகமாடி அப்பாவி மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி தூண்டிவிட்டு போராட்டம் நடத்த சதித்திட்டம் தீட்டியதற்கு திமுக தான் வெட்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து கல்லூரி கட்டமைப்புகளையும் அதிமுக ஏற்படுத்தித் தந்துள்ளது என்றும் திமுகவின் அரசியல் சதிகளில் வீழாமல் படி வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: பண மோசடி வழக்கு! எகிறும் ரிப்போர்ட்... அஜய் வாண்டையாருக்கு ரிவிட் அடித்த கோர்ட்...