• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஜெயலலிதா பாணியில் அதிரடி காட்டிய எடப்பாடி... தொகுதி மாறிய முக்கிய வி.ஐ.பி.க்கள் - காரணம் என்ன?

    23 வேட்பாளர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. 
    Author By Amaravathi Wed, 25 Mar 2026 11:55:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Candidate who change Constituency

     மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா காலத்தில் இருந்தே கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்த கையோடு முதன் முதலில் வேட்பாளர் பட்டியலானது அதிமுகவில் இருந்து தான் வெளியாகும். அதேபாணியில் நேற்று கூட்டணிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்த எடப்பாடி பழனிசாமி, இன்று காலை முதற்கட்டமாக 23 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் சில முன்னாள் அமைச்சர்கள் தொகுதி மாறியுள்ளனர். 

    முதலில் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என பார்க்கலாம். எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். மீண்டும் அதே தொகுதியில் அவர்  போட்டியிட முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேபோல அதிமுகவினுடைய துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி ஏற்கனவே தான் போட்டியிட்ட வேப்பனஹள்ளி தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் திண்டுக்கல் தொகுதியிலேயே போட்டியிடுகிறார். 

    அதிமுகவினுடைய துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் கடந்த முறை போட்டியிட்ட நத்தம் தொகுதியில் போட்டியிருக்கிறார். அதிமுகவினுடைய தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி 4வது முறையாக தொண்டாமுத்தூர் தொகுதியில் களமிறங்குகிறார். குமாராபாளையம் தொகுதியில் அமைச்சர் தங்கமணி போட்டியிடுகிறார். 2011, 2016, 2021 ஆகிய மூன்று முறை குமாரபாளையத்தில் போட்டியிட்டதைத் தொடர்ந்து 4வது முறையாக களம் காண்கிறார்.  ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயகுமார் 7வது முறையாக போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் தற்போதைய ராஜ்யசபா எம்.பி.யுமான சி.வி.சண்முகத்துக்கு வந்து மயிலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கடந்த தேர்தலில் வந்து விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதனால் விழுப்புரத்தில் இருந்து மைலம் தொகுதிக்கு மாறியுள்ளார். 

    இதையும் படிங்க: என்ன ஆட்டத்துக்கு ரெடியா? 2026-லும் ராயபுரம் தான்...! 7வது முறையாக களமிறங்கும் ஜெயக்குமார்..!!

    4வது முறையாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பாலக்கோடு தொகுதியில் கே.பி. அன்பழகன் போட்டியிடுகிறார் அவரும் பாலக்கோடு தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். நன்னிலம் தொகுதியில் 4வது முறையாக முன்னாள் அமைச்சர் காமராஜ் வந்து போட்டியிடுகிறார். ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் தொகுதியில் 2வது முறையாக போட்டியிடுகிறார். 

    4வது முறையாக விராலிமலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான  டாக்டர் சி. விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். கோவில்பட்டி தொகுதியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ 3வது முறையாக களமிறங்குகிறார். திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சரும், அம்மாவட்ட செயலாளருமான ஆர். பி உதயகுமார் போட்டியிடுகிறார்.  2011ல் சாத்தூரில் நின்று வெற்றி பெற்றவர் 2016ம் ஆண்டு விருதுநகர் தொகுதிக்கு மாறினார். 2021ம் ஆண்டில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டவர், 2வது முறையாக திருமங்கலத்தில் களமிறங்கியுள்ளார். 

    சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி 4வது முறை போட்டியிடவுள்ளார். ஆனால் அவர் பழையபடி தற்பொழுது சிவகாசி தொகுதியிலேயே திரு கே டி ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கியுள்ளது. மதுரவாயில் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் 3வது முறையாகவும், திருப்பரங்குன்றத்தில் 2வது முறையாக ராஜன் செல்லப்பாவும் களமிறங்குகின்றனர். 

     முன்னாள் அமைச்சர் கே. சி. கருப்பண்ணன் பவானி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு 4வது முறையாக ஜோலார்பேட்டையிலேயே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  கரூரில் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர்4வது முறையாக களமிறங்குகிறார்.  அரியலூர் தொகுதியில் அதிமுகவினுடைய முன்னாள் கொறடாவாக இருந்த தாமரை ராஜேந்திரன்  போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: #BREAKING: எடப்பாடி தொகுதியில் களமிறங்கும் EPS... அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

    மேலும் படிங்க
    நேபாள அரசியலில் புதிய அத்தியாயம்: 35 வயதில் பிரதமர் பதவி..!! பாலேந்திர ஷாவுக்கு நரேந்திர மோடி வாழ்த்து..!!

    நேபாள அரசியலில் புதிய அத்தியாயம்: 35 வயதில் பிரதமர் பதவி..!! பாலேந்திர ஷாவுக்கு நரேந்திர மோடி வாழ்த்து..!!

    இந்தியா
    மோடியும், நானும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பவர்கள்!! பலருக்கு இந்த தகுதி இல்லை!! ட்ரம்ப் சூசகம்!

    மோடியும், நானும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பவர்கள்!! பலருக்கு இந்த தகுதி இல்லை!! ட்ரம்ப் சூசகம்!

    இந்தியா
    யார் அந்த SIR? நீங்காத மர்மம்... சும்மா விட மாட்டோம்..! அதிமுக சூளுரை..!!

    யார் அந்த SIR? நீங்காத மர்மம்... சும்மா விட மாட்டோம்..! அதிமுக சூளுரை..!!

    தமிழ்நாடு
    லேட் பண்ணாதீங்க! சொன்ன டைமுக்கு வாங்க!! தவெக தலைவர் விஜய்க்கு தேர்தல் அதிகாரிகள் அட்வைஸ்!

    லேட் பண்ணாதீங்க! சொன்ன டைமுக்கு வாங்க!! தவெக தலைவர் விஜய்க்கு தேர்தல் அதிகாரிகள் அட்வைஸ்!

    அரசியல்
    #BREAKING: அதிமுக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! 127 வேட்பாளர்கள் யார்? முழு விவரம்...!!

    #BREAKING: அதிமுக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! 127 வேட்பாளர்கள் யார்? முழு விவரம்...!!

    தமிழ்நாடு
    எ.வ.வேலுக்கு எதிராக திரும்பிய வன்னியர்கள்!  விவசாயிகளும் கோவம்!! திண்டாட்டத்தில் திருவண்ணாமலை தொகுதி!

    எ.வ.வேலுக்கு எதிராக திரும்பிய வன்னியர்கள்! விவசாயிகளும் கோவம்!! திண்டாட்டத்தில் திருவண்ணாமலை தொகுதி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share