அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் கழகத்தைத் தொடர்ந்து அவதூறாகப் பேசி வரும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பத்துரை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:அதிமுகவையும், கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியையும் இடைவிடாமல் அவதூறாகப் பேசி வரும் அமைச்சர் ஆதவ அர்ஜுனா மீது அதிமுக சார்பில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு கழக அமைப்புச் செயலாளர் ஆதிராஜாராம் மூலம் சென்னை பெருநகர மூன்றாவது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் மீதான இந்தக் கிரிமினல் வழக்கில் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளத் தேவையான அனுமதி தொடர்பாக, புதிய குற்றவியல் சட்டமான பிஎன்எஸ்எஸ் பிரிவு 218-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக ஆளுநர் மாளிகைக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்கள் மனு கொடுத்தா வாங்குவீங்களா.? இல்ல ARREST பண்ணுவீங்களா.? கொந்தளித்த அதிமுக.!!
அமைச்சர் மீது வழக்கு தொடர அரசு அனுமதி அவசியம் என்பதால், அந்த அனுமதியை விரைந்து வழங்கும்படி கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கின் தொடர் விசாரணை வருகிற நவம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக மீதும் அதன் தலைவர் மீதும் தொடர்ந்து அவதூறு பேசும் செயல்களை கழகம் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளும் என்பதை இந்த வழக்கு நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது.இவ்வாறு இன்பத்துரை தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு முதல்வரா? தவெகவுக்கு மட்டும் முதல்வரா?... விஜயை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!