தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் அதிமுக தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களில் இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமடைந்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், திமுக ஆட்சியில் கடந்த ஐம்பத்தாறு மாதங்களில் சுமார் நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி, ஆளுநர் ஆர்.என். ரவியிடம் விரிவான ஆவணங்களுடன் புகார் அளிக்கப்பட்டது.
இது 2026 ஜனவரி மாதத்தில் நடந்த மிக முக்கியமான நிகழ்வு.இந்தப் புகாரில், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட இருபது துறைகளுக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளதாக விவரங்கள் தரப்பட்டுள்ளன.

கடந்த நான்கரை ஆண்டுகளாக தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளைச் செவிமடுக்கக் கூட நேரமின்றி, கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என்ற மூன்றையே தாரக மந்திரமாக திமுக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் செயல்பட்டதாக அதிமுக குற்றம் சாட்டி இருக்கிறது. தேர்தல் நெருங்கியதை அடுத்து தங்களது தொகுதிகளுக்குள் செல்லும்போது, தொகுதி மக்கள் அவர்களை நேருக்கு நேர் நிறுத்தி அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை வீசி வருவதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கொழுத்துபோய் திரியும் ACCUST-கள்... தட்டிக் கேட்டா கொலையா? நயினார் கொதிப்பு..!
இது திமுக அரசுக்கு எதிராக உருவாகி வரும் எதிர்ப்பலையின் ஒரு சிறு துளி மட்டுமே என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் காலம் நெருங்க நெருங்க, மக்களின் கோபமும் விரக்தியும் பெருவெள்ளமாக மாறி, தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சி மட்டுமல்ல திமுக என்ற கட்சியே தமிழ்நாட்டில் இருந்து துடைத்தெறியப்படும் என்றும் அதிமுக உறுதிப்பட தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுக பிரமுகர் தலை துண்டித்துக் கொலை...! வெட்கக்கேடு... EPS கடும் கண்டனம்..!