ஒவ்வொரு முறையும் பரப்புரையின் போது ஆம்புலன்சை விடுகிறார்கள். இந்த ஆம்புலன்ஸில் நோயாளி செல்லவில்லை. அடுத்த முறை கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால் ஆம்புலன்ஸ் ஓட்டிபவர்கள் பேஷன்ட்டாக அதே ஆம்புலன்ஸில் செல்ல வேண்டி வரும் என எடப்பாடி பழனிசாமி நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என சட்டமன்றத் தொகுதி வாரியாக, தொடர் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, 33 வது நாளாக இன்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் அணைக்கட்டு பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவ்வழியாக ஆம்பலன்ஸ் வந்துவிட்டதால் பேச்சை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் க்கு வழி விட கூறினார். அப்போது ஆம்புலன்சில் நோயாளிகள் யாரும் இல்லை என தெரிய வந்தது. இதனால் கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கூட்டத்திலும் ஆம்புலன்ஸ் விட்டு பிரச்சனை செய்து கொண்டு இருக்கிறீர்கள். இப்படி ஒரு கேவலமான அரசாங்கம். இந்த ஆம்புலன்ஸ் எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: உன் வாய்… உன் உருட்டு! அதிமுக மேல தப்புதான் - சசிகலா பரபரப்பு பிரஸ்மீட்
இந்த ஆம்புலன்ஸில் நோயாளியை செல்லவில்லை. இதுபோல முப்பது கூட்டத்திற்குல் ஆம்புலன்ஸ் விடுகிறார்கள். இதுபோல அடுத்த முறை கூட்டத்திற்கு ஆம்புலன்ஸை விட்டால் ஆம்புலன்சை ஓட்டி வருபவர் பேசன்டாக காக மாறி அதே ஆம்புலன்ஸின் செல்ல வேண்டி வரும் என எச்சரித்தார். மேலும் ஆம்புலன்ஸ் எண் என்னவென்று குறித்து வைத்துக் கொண்டு நாளை புகார் அளியுங்கள் என்றார்.
இதையும் படிங்க: மலைவாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடு... அசத்தல் அறிவிப்புகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி..!