மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமானஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை நினைவுகூர்ந்ததோடு, ஆளும் தி.மு.க. அரசை மிகக் கடுமையாக விமர்சிதார்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுதல் தொடர்பான விவாதம் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், “அதிமுக என்பது மதம்–ஜாதி–இனம் கடந்த இயக்கம். அனைவரும் சமம் என்பதே எங்கள் அடிப்படை நோக்கு. ஆனால் கோயில் வழிபாடுகளில் தொன்றுதொட்டு பின்பற்றப்படும் மரபுகள், ஆகம முறைகள் மாற்றமின்றி தொடர வேண்டும் என்பதே என் கருத்து. மேலும் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இப்போதைக்கு அதற்கு மேல் கருத்து சொல்லுவது சரியல்ல” என்றார். அதே கேள்வி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும் இதே அணுகுமுறையில்தான் பேசினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்து அமைப்புகளை ஆதரிக்கிற ஜெயக்குமார் வெட்கப்பட வேண்டும் என திமுக அமைச்சர் ரகுபதி விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நாங்கள் யாருடைய காலிலும் விழவில்லை. ஆனால் திமுக தான் டெல்லிக்கு சென்று பாஜகவின் காலில் விழுந்து கிடக்கிறது. இரு கட்சிகளுக்கும் வெளியுலகுக்குத் தெரியாத ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. 2026 தேர்தலுக்கு பிறகு திமுக பாஜகவுக்கு துணை நிற்கும் நாள் தூரத்தில் இல்லை,” எனக் கூறினார்.
இதையும் படிங்க: “ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது...” - பாஜக, அதிமுக சீனியர் தலைகளையும் பொளந்தெடுத்த அமைச்சர் ரகுபதி...!
திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை விளக்கும்போது, கவுண்டமணி நடித்த ஒரு நகைச்சுவைக் காட்சியை எடுத்துக்காட்டாகச் கூறிய ஜெயக்குமார் “நாங்கள் அடிப்பது போல் அடிக்கிறோம்; நீங்கள் அழுவது போல் அழுகுங்கள்” என்பது தான் அவர்களுக்குள் உள்ள டீலிங், என சாடினார். திமுக உள்ளே ஒன்றும் புறம் ஒன்றுமாகக் காட்டும் பழக்கத்தில் வல்லவர்கள்; அதிமுகவிற்கு அப்படி இரட்டை வேடம் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
இதற்குப் பின்னர், “பாஜக திமுகவுடன் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது என்று நீங்கள் குறிக்கிறீர்களா?” என்ற கேள்வி எழுந்தபோது, “என் விமர்சனம் பாஜக மீது இல்லை; திமுகவின் செயல்முறைகளைக் குறித்தே நான் சொல்கிறேன்,” என்றார்.
இதையும் படிங்க: நீங்களும் தவெக போறீங்களா..? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பளிச் பதில்…!