அதிமுக தலைமை மீதான அதிருப்தியில் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதும் மாற்று கட்சிக்கு செல்வதும் அவ்வபோது நிகழ்கிறது. குறிப்பாக திமுகவில் பல்வேறு நிர்வாகிகள் சமீபத்தில் சேர்ந்தனர். செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றுவிட்டார். இது போன்ற நிகழ்வுகள் அதிமுக தலைமையில் பதற்றத்தில் வைத்துள்ளன என்றே கூறலாம்.
இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சரான நிலோஃபர் கபில் திமுகவில் இணைய உள்ளார் என்ற தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வாணியம்பாடி தொகுதியைச் சேர்ந்தவர் நிலோஃபர் கபில். 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றவர். கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தி அவரை மீண்டும் விலக வைத்துள்ளன.

சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அதிமுகவிலிருந்து தான் விலகுவதாகவும், கட்சியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நிலோஃபர் கபில் திமுகவில் இணைய உள்ளார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிஞ்சு குழந்தை கடத்தல்... முழுக்க முழுக்க DMK நிர்வாகத் தோல்வி..! விளாசிய அதிமுக..!
குறிப்பாக இன்று திமுக நடத்தும் வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் சிலர் திமுகவுக்கு செல்வது தொடர்ந்து நடந்து வருவது கட்சியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலோஃபர் கபிலின் இந்த முடிவு அவரது அரசியல் பயணத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக கூட்டத்துக்கு சவப்பெட்டியோட போங்க ..! அதிமுக செய்தி தொடர்பாளர் காட்டம்..!