கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படுகிறார். அதிமுகவில் இருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுக்க அதிமுக ஆட்சி அமையும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதற்கான முயற்சிகளை பத்து நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்திருந்தார் செங்கோட்டையன். தலைமைக்கு கெடு விதித்து இருந்த செங்கோட்டையனின் கட்சிப் பதவியை பறித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இதன் பிறகு செங்கோட்டையனின் ஆதரவாளர்களின் கட்சி பதவியையும் பறித்தார். இதன் விளைவாக செங்கோட்டையன் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தனர். இருப்பினும் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என்று செங்கோட்டையன் கூற, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் செங்கோட்டையனை சந்தித்து தங்களது முழு ஆதரவை தெரிவித்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் செங்கோட்டையன் அதிமுக தலைமைக்கு விதித்த 10 நாட்கள் இன்றுடன் முடிவடைந்த நிலையில், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான செங்கோட்டையனை புறக்கணித்துவிட்டு கட்சியின் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அப்ப மறுபடியும் PATCH UP தான் போலயே! நயினாரை சந்திப்பேன்... இறங்கி வந்த ஓபிஎஸ்
கட்சி பதவிகளில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் அவரை புறக்கணித்து விட்டு அதிமுகவினர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்தியுள்ளனர்.
செங்கோட்டையனுக்கு பதிலாக புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ A.K.செல்வராஜ் தலைமையில், அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ பண்ணாரி, முன்னாள் எம்எல்ஏ.க்கள் ரமணீதரன், இஎம்ஆர் ராஜா, முன்னாள் எம்.பி காளியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், அதிமுக ஒருங்கிணைப்பை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமியுடன் மோதலில் உள்ள கே.ஏ.செங்கோட்டையன் இந்த பொதுக்கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை.
இதையும் படிங்க: என்ன நடக்க போகுதோ? செங்கோட்டையன் விதித்த கெடு இன்றுடன் நிறைவு...