ஈரானில் வெடித்துள்ள போர் மத்திய கிழக்கில் மிகப்பெரிய பதற்றத்தைக் கொடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு படைகள் 5வது நாளாக ஈரானை தாக்கி வரும் நிலையில், தற்போது ஏஐ மூலம் பயங்கர ஆயுதத்தை அமெரிக்கா களமிறக்கியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஈரானின் பல்வேறு பகுதிகளை குறி வைத்து தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்தன. அமெரிக்காவின் இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத ஈரான் பதிலுக்கு வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் இஸ்ரேல் மீதும் வான்வெளி தாக்குதல்களை நடத்தியது. இந்த சூழலில் தான் இஸ்ரேலும் அமெரிக்காவும் நடத்திய கூட்டு ராணுவ நடவடிக்கையில் ஈரானின் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டிருக்கிறார். இதனால் இன்னும் போர் பதற்றம் அதிகமாகியுள்ளது.
இதற்கிடையே அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதலுக்கு ஏஐ கருவிகளை பயன்படுத்தி இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் ஆந்திராபிக் நிறுவனத்தின் கிளாட் ஏஐ கருவிகளை பயன்படுத்தி வந்தது. இதற்காக பென்டகனுக்கு ஆந்திராபிக் நிறுவனத்திற்கும் சுமார் 200 மில்லியன் டாலர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆந்திராபிக் நிறுவனம் பெண்டகன் விதித்த கட்டுப்பாடுகளை ஏற்க மறுப்பதாக கூறி அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பயங்கர திருப்பம்.. கமேனிக்காக போரில் குதித்த பவர்ஃபுல்லான நாடு... உச்சக்கட்ட போர் பதற்றம்...!!
சமீபத்தில் அயதுல்லா அலி கமேனி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கூட ஆந்த்ரோபிக் நிறுவனத்தோட ஏஐ டூல்ஸ்களை உபயோகப்படுத்தி துல்லிய தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த துல்லிய தாக்குதலுக்கு ஆந்த்ரோபிக் நிறுவனத்தோட கிளவுட்ஏஐ டூல் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உளவு தகவல்களை சேகரித்த தொகுப்பது, தங்கள் பிளான் படி போர் நடந்தால் எப்படி இருக்கும் என சிமுலேட்டட் வார் கேம்ஸை உருவாக்கி பயிற்சி அளிப்பது, டார்கெட்டை துல்லியமாக அடையாளப்படுத்தி காட்டுவது என பல முக்கிய வேலைகளுக்கு கிளாட்ஏஐ பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் உச்சக்கட்டமாக பொதுமக்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பது மற்றும் டார்கெட் நிர்ணயிச்சு தானாகவே கொலை செய்யும் அட்டானமஸ் ஆயுதங்களை உருவாக்க அமெரிக்கா முயற்சித்தது. ஆனால் அதை ஆந்த்ரோபிக் நிறுவனம் ஏற்க மறுத்ததால் தான் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தம் ஓபன் ஏஐ நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது. அட்டானமஸ் ஆயுதங்கள் மற்றும் மாஸ் சர்வைலன்ஸ் போன்றவற்றை ஓபன்ஏஐ நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை! அமெரிக்க குற்றச்சாட்டுகளை மறுத்த சர்வதேச அணுசக்தி முகமை!