செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாகக் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்தக் கூட்டம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு என்டிஏ கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கும் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. மதுராந்தகம் சென்னை-திண்டிவனம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இடத்தில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் பொதுக்கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் இருந்து ஏராளமான தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 5 லட்சம் பேர் வரை கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் கெடுபிடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அன்புமணி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த கூட்டத்தில் அன்புமணியும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அன்புமணி புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாமக அன்புமணி, திமுக ஆட்சி முடிவுக்கு இந்த மாபெரும் பொதுக்கூட்டம் முன்னோட்டம் எனக் கூறினார். பல கட்சிகள் தங்கள் கூட்டணியில் சேர்ந்து இருப்பதாகவும் இன்னும் நிறைய கட்சிகள் தங்களோடு கூட்டணி அமைக்கும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: WELCOME BACK..! ஏன்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைந்த டிடிவி தினகரனுக்கு இபிஎஸ் வரவேற்பு...!
திமுகவுக்கு எதிரான சுனாமியாக உருவெடுத்து இன்னும் இரண்டு மாதத்தில் திமுக ஆட்சியாகற்றப்படும் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இதை விரும்புவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அன்றாடம் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதாக தெரிவித்தார். குறிப்பாக செவிலியர்கள் அரசுக்கு எதிராக நடத்தும் போராட்டங்கள், விவசாயிகள், இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர் ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் போராடி வருவதாக தெரிவித்தார். தங்கள் கூட்டணி தமிழ்நாட்டுக்கு விடிவெள்ளியாக அமையும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: மீண்டும் NDA கூட்டணியில் அமமுக..! TTV தினகரன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!