பாமகவின் தலைமைப் பதவி குறித்த பிரச்சினை 2025-ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்தே தீவிரமடைந்தது. அன்புமணி ராமதாஸின் தலைவர் பதவிக்காலம் மே 28, 2025 அன்று முடிவடைந்ததாக ராமதாஸ் தரப்பு கூறி வருகிறது. அதன்பிறகு ராமதாஸ் தானே கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றதாக அறிவித்து, தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் அளித்திருந்தார்.
ஆனால், தேர்தல் ஆணையம் 2025 ஜூலை 30-ஆம் தேதி ஒரு கடிதத்தை அனுப்பியது. அந்தக் கடிதத்தில், தமிழக சட்டமன்றத் தேர்தல் உள்ளிட்ட வரவிருக்கும் தேர்தல்களுக்காக பாமகவுக்கு 'மாம்பழம்' சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கடிதம் அன்புமணி ராமதாஸின் சென்னை முகவரிக்கு அனுப்பப்பட்டது. இதைத்தான் ராமதாஸ் தரப்பு கடுமையாக எதிர்த்துள்ளது. அன்பு மணி தரப்பு மீீது கடுமையான குற்றச்சாட்டும் முன் வைத்தனர்.

தாங்கள் கட்சியின் உண்மையான தலைவரும், நிறுவனரும் ராமதாஸ் தான் என்றும், எனவே அந்தக் கடிதம் தங்கள் முகவரிக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்றும் வாதிட்டுள்ளனர். இந்தக் கடிதம் தவறான முகவரிக்கு சென்றதால், அது அன்புமணி தரப்புக்கு சாதகமாக அமைந்துவிட்டதாகவும், இது நியாயமற்றது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.1020 கோடி டெண்டர் முறைகேடு... அமைச்சர் நேருவுக்கு எதிராக அதிமுக வழக்கு... விசாரணைக்கு ஏற்ற ஹைகோர்ட்..!
இதனால், அந்த தேர்தல் ஆணைய கடிதத்தை ரத்து செய்து, புதிதாக தங்கள் முகவரிக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என்று ராமதாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. ராமதாஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை பிப்ரவரி இரண்டாம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாம்பழம் சின்னம் யாருக்கு என்பது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்தின் கடிதம் மீதான விவாதமும் நடைபெறும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாதுகாப்பு முக்கியமில்லையா? புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோத ரிசார்ட்டுகள்... ஆட்சியருக்கு எச்சரிக்கை...!