தமிழக எதிர்க்கட்சித் தலைவரை நோக்கி, உங்கள் தந்தை, உங்கள் தாத்தா காவேரி நீர் பெற என்ன செய்தார் என்று அரைவேக்காடு தனமாக அமைச்சர் கேள்வி கேட்பதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். நீங்கள் 9 வயது சின்ன பையனாக இருந்த போது 1990 ஜூன் 2-ல் காவேரி தீர்ப்பாயம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதி என தெரிவித்துள்ளார்.
பக்ரா நங்கல் நதிநீர் வாரியம் போல், காவேரி நதிநீர் வாரியத்தையும் அமைக்க 2018 பிப்ரவரி 16 தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போது, பாஜக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்றி காவேரி மேலாண்மை ஆணையம் என்று அமைக்க கர்நாடகாவுக்கு ஆதரவாகவும் தமிழகத்திற்கு விரோதமாகவும் பாஜக துரோகம் செய்த போது RSS இயக்கத்தில் இருந்த நீங்கள் கலைஞர் பற்றியோ காவேரி உரிமை பற்றியோ பேச எந்த தகுதியும் உரிமையும் இல்லை என்று தெரிவித்தார்.

பாஜக ஆட்சிக்கும் உங்கள் ஆட்சிக்கும் பாலமாக இருந்து உங்கள் ஆட்சியை தாங்கி பிடிக்கும் டெல்லி பிரதிநிதி பெங்களூர் வெங்கட் நாராயணா, தனிச் செயலர் ஆந்திர விஷ்ணு ரெட்டி, நீர்வளத்துறை அமைச்சர் பாண்டிச்சேரி புஸ்ஸி ஆனந்த் உட்பட நீங்கள் நால்வரும் காவேரி பிரச்சினையையும், தமிழக மக்களையும் மறந்து, காவேரி மேகதாது படம் தயாரித்து கர்நாடகாவில் ஓட்டுவதற்கு ஒத்திகை பார்த்து கொண்டிருக்கிறீர்களா CM sir ? என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: "என் புள்ள விஜி.." மெட்ரோ ரயிலில் CM விஜய் கையில் முத்தமிட்டு கொஞ்சிய பெண்..! நெகிழ்ச்சி சம்பவம்..!!
"ஜனநாயகன்" பட ரிலீஸ்-க்கு முன் கர்நாடகம் சென்று உங்கள் ரசிகர்களை உற்சாகமூட்டிய முதலமைச்சரே., தற்போது முடங்கிக் கிடக்கும் படத்தை ஓட்டுவதற்காக மீண்டும் கர்நாடகம் செல்ல துடிக்கிறீர்களா CM Sir ? என சாடினார். தமிழக உரிமைகளை தொடர்ந்து ஒன்றிய அரசிடம் பறிகொடுத்து வரும் உங்கள் முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா என்றும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: NLC துரோகம்... துணைப் போக தான் ஆட்சிக்கு வந்தீங்களா விஜய்..? வேல்முருகன் ஆவேசம்..!!