தமிழ் திரை உலகம் மீண்டும் ஒரு பெரிய இழப்பை சந்தித்துள்ளது. நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என பல முகங்கள் கொண்ட கே. பாக்யராஜ் 73 வயதில் சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு தனது முன்னாள் வழிகாட்டியும், இயக்குனர் இமயமுமான பாரதிராஜா மறைந்த சோகம் அடங்குவதற்குள் இந்த திடீர் மரணம் ஏற்பட்டுள்ளது.
பாக்யராஜ் ஜனவரி 7, 1953 அன்று ஈரோடு மாவட்டம் அருகே உள்ள வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். உண்மைப் பெயர் கிருஷ்ணசாமி பாக்யராஜ். சினிமா மீதான ஆர்வத்தால் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னைக்கு வந்த அவர், ஆரம்பத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார். ரிக்ஷா இழுப்பது, சர்க்கஸில் கோமாளியாக நடிப்பது போன்ற பணிகளையும் செய்துள்ளார். பின்னர் படங்களில் சிறிய வேடங்களில் நுழைந்த அவர், பாரதிராஜாவின் உதவியாளராகப் பணியாற்றினார். 1977-ல் வெளியான 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குனராகவும், சிறிய ரோலில் நடிகராகவும் அறிமுகமானார்.

1979-ல் சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாக்யராஜ், தொடர்ந்து தனது தனித்துவமான பாணியால் தமிழ் சினிமாவை மாற்றினார். இன்று மாரடைப்பு ஏற்பட்டு இயக்குனர் பாக்கியராஜ் உயிரிழந்தார். காலையில் நடை பயிற்சி மேற்கொண்டு விட்டு வீட்டிற்கு வந்த பாக்கியராஜ் சோபாவில் அமர்ந்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிர் பிரிந்ததாக கூறப்பட்டுள்ளது. இயக்குனர் பாக்யராஜின் மறைவு திரை உலகத்தினரை மிகுந்த கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: "திரைக்கதை சக்கரவர்த்தி"..! இயக்குனர் பாக்கியராஜ் மறைவு... அரசியல் கட்சியினர் இரங்கல்..!!
மறைந்த இயக்குனர் பாக்கியராஜ் உடலுக்கு முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் ஆ.ராசா, கே.என். நேரு, டி.ஆர். பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பாக்யராஜ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிங்க: புகைப்படத்தால் புகைச்சல்... கும்பகோணம் நகராட்சியில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கவுன்சிலர்களால் பரபரப்பு...!