கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கவலை தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி தெங்கியாநத்தம் அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை, கிருஷ்ணகிரி ஊத்தங்கரை ஓடும் பேருந்தில் அரசுப் பேருந்து நடத்துனர் மாணவிக்கு பாலியல் தொல்லை, சிவகங்கை மாவட்டம் சாக்கோடை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
சென்னை அரும்பாக்கத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் உடற்கல்வி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை, திருப்பூர் வெள்ளக்கோவில் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு வட மாநில இளைஞர் பாலியல் தொல்லை அளித்தது, சென்னையில் ஜிஎஸ்டி பெண் ஆய்வாளருக்கு ஜிஎஸ்டி காவல் ஆய்வாளர் பாலியல் தொல்லை கொடுத்தது, இராமநாதபுரம் கீழக்கரையில் இளைஞர் கஞ்சா இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரை மாய்த்துக் கொண்ட சோகம், திண்டுக்கலில் தனியார் பஸ் டிரைவர் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை ஆகியவை வழக்குகளாகப் பதிவாகி செய்திகளில் வந்தவை மட்டுமே என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இன்னும் எத்தனை பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறதோ என்று கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன், இந்தப் பதிவை போஸ்ட் செய்யும் போது கூட தமிழகத்தில் ஏதேனும் ஒரு மூலையில் பெண் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: காப்பாத்துங்க...! காப்பாத்துங்க...!! - ரத்தம் சொட்ட, சொட்ட காவல்நிலையத்திற்குள் தஞ்சம் புகுந்த நபரால் பரபரப்பு... பாஜக நிர்வாகியால் நேர்ந்த பயங்கரம்...!
பெருமையாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கப் பெண்படையின் தற்போதைய நிலை என்ன என்று கேட்ட அவர், இத்தனை செய்திகளைப் பார்த்த பின்னும் சொல்வதற்கு ஒன்றுமில்லை எனத் தெரிவித்தார். அரசில் பெண்களின் பாதுகாப்பு எப்படி உள்ளது என்பதை மக்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு... வெற்றிக்கு பாடுபடுவோம்..! நயினார் நாகேந்திரன் உறுதி..!!