சத்தீஸ்கர் மாநிலத்தில் 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது, மதுபான விற்பனை மற்றும் கொள்கை தொடர்பாக பெரும் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இந்த முறைகேடுகள் மூலம் அரசுக்கு சுமார் 2,100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இதில் சைதன்யா பாகேல் முக்கிய பங்கு வகித்ததாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக, அமலாக்கத் துறை ஏற்கனவே பல முக்கிய நபர்களை கைது செய்துள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் கவாசி லக்மா, ராய்ப்பூர் மேயர் ஐஜாஸ் தேபரின் மூத்த சகோதரர் அன்வர் தேபர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அனில் துதேஜா, இந்திய தொலைத்தொடர்பு சேவை அதிகாரி அருண்பதி திரிபாதி ஆகியோர் அடங்குவர். மேலும், இந்த வழக்கில் சுமார் 205 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சோதனை மற்றும் கைது2025 மார்ச் 9ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் உள்ள பில்லாய் பகுதியில், பூபேஷ் பாகேலின் வீடு உட்பட சைதன்யா பாகேல் மற்றும் அவரது நெருங்கிய நண்பரான லட்சுமி நாராயண் பன்சால் ஆகியோரின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைகள் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. மாநிலம் முழுவதும் 15 இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்... சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் ரெய்டு...!
இந்த சோதனைகளைத் தொடர்ந்து, இன்று சைதன்யா பாகேல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், பூபேஷ் பாகேலின் வீட்டின் முன் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அமலாக்கத்துறை நடவடிக்கை ஒருபோதும் அடிப்படையை மாற்றும் என்று பூபேஷ் பாகல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர்பாபா..! ரூ.40 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி..!