திருப்பனந்தாளில் நேற்று புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் வாங்கிய பிரியாணி சாப்பிட்ட எட்டு குழந்தைகள் இரண்டு பெரியவர்கள் உள்ளிட்ட பத்து நபர்கள் வாந்தி மற்றும் பேதி காரணமாக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாளில் நேற்று புதிதாக பிரியாணி கடை திறக்கப்பட்டுள்ளது. ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று மதியம் திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த நபர்கள் பிரியாணி வாங்கி உள்ளனர். பள்ளிக்கூடம் சென்று வீடு திரும்பிய தங்களது குழந்தைகளுக்கு மாலை உணவாக பிரியாணி கொடுத்துள்ளனர் .
இதையும் படிங்க: பட்டினம்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலம் ரெடி... புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக சி.எம்.விஜய் இன்று முக்கிய ஆலோசனை...!
இரவு எட்டு மணி அளவில் பிரியாணி சாப்பிட்ட சில குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டுள்ளது. வாந்தி பேதி ஏற்பட்ட குழந்தைகள் முதல் உதவிக்காக திருப்பனந்தாள் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நேரம் ஆக ஆக 10க்கும் மேற்பட்ட நபர்கள் வாந்தி பேதி காரணமாக திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் 8 குழந்தைகள் இரண்டு பெரியவர்கள் என பத்து நபர்களை கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நள்ளிரவுக்கு பின் இவர்கள் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . ஒரு சிலர் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
பிரியாணி சாப்பிட்டதால் தான் தனது குழந்தைக்கு வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டதாக சிகிச்சை பெரும் குழந்தையின் தந்தை குமரேசன் தெரிவித்தார் .
இதையும் படிங்க: சுத்த வேஸ்ட்... பதிலுரையில் பதிலே இல்லையே?... சி.எம்.விஜயை வெளுத்து வாங்கிய சிபிஎம் சண்முகம்...!