• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தீபாவளிக்கு ஊருக்கு செல்வோருக்கு சிக்கல்... 3வது நாளாக ரயில் டிக்கெட் புக்கிங்கில் தொடரும் அவலம்...!

    தீபாவளி ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு மூன்றாவது நாளாக இன்றும் தொடங்கியது. ஆனால், இன்றும் பயணிகளுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Amaravathi Tue, 08 Sep 2026 10:39:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Diwali Train ticket booking issue

    தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்பதிவு நிறைவடைந்துள்ளது. மேலும், பல பயணிகளுக்கு சர்வர் பிரச்சினை ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ரயிலில் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள், தங்களுடைய பயணத் தேதியிலிருந்து 60 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து பெறக்கூடிய நடைமுறை தற்போது அமலில் இருந்து வருகிறது.

    அந்த வகையில், இந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டி தீபாவளி பண்டிகை வருவதால், பெருவாரியான மக்கள் முன்கூட்டியே தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: பயணிகளின் கனிவான கவனத்திற்கு... இன்று முதல் சென்னை புறநகர் ரயில் சேவையில் அதிரடி மாற்றம்...!

    அந்த வகையில், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சொந்த ஊர் செல்லத் திட்டமிட்டவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த இரண்டு நாட்களாக தொடங்கியது.

    காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது என்றால், 8.05 மணிக்கே தென்மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய ரயில்களில் பெரும்பாலான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்ததைப் பார்க்க முடிந்தது.

    அதுமட்டுமல்லாமல், பல பயணிகளுக்கு சர்வர் கோளாறும் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் பெருவாரியான மக்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முயற்சித்ததால், சர்வரில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பலருக்கு வெயிட்டிங் லிஸ்ட் வந்தது. இதன் காரணமாக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    இப்படிப்பட்ட நிலையில்தான் மூன்றாவது நாளாக, அதாவது தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளான சனிக்கிழமை சொந்த ஊர் செல்லக்கூடியவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென்மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய ரயில்களில் முன்பதிவு நிறைவடைந்துள்ளது.

    சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு, குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதால், ரயில் டிக்கெட் கிடைக்காமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    ஒரே நேரத்தில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய பலர் முயற்சிப்பதால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. பலருக்கும் சர்வர் கோளாறு ஏற்பட்டதால், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்தனர்.

    மேலும், சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டதாக வெயிட்டிங் லிஸ்ட் காட்டப்பட்டதால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    இந்திய ரயில்வேயைப் பொறுத்தவரையில், சமீபத்தில்தான் புதிய கிளவுட் அடிப்படையிலான பயணிகள் முன்பதிவு அமைப்பான பிஆர்எஸ் மேம்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு ஒரு நிமிடத்திற்கு ஒன்றரை லட்சம் டிக்கெட்டுகள் மற்றும் 40 லட்சம் விசாரணைகளைக் கையாளக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டிருந்தது.

    முன்னதாக ஒரு நிமிடத்திற்கு 25 ஆயிரம் முதல் 32 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலையில், இந்த வசதி மேம்படுத்தப்பட்டது.

    இருப்பினும், தற்போது பண்டிகைக் காலங்களில் பலருக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிரமம் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

    ரயில் டிக்கெட் முன்பதிவு சேவை விரிவுபடுத்தப்பட்டிருந்தாலும், பயணிகளின் தேவை பல மடங்கு அதிகரித்திருப்பதால், டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை என்ற வேதனையை பயணிகள் பதிவு செய்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ஒரே நேரத்தில் பொதுமக்கள் பெருவாரியாக டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்பதால் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக ரயில்வே தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதையும் படிங்க: சென்னை எழும்பூர் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

    மேலும் படிங்க
    என்னால் முடியாதது எதுவும் இல்லை.. சூரியின் வைரல் பேட்டி..!! குழந்தைகளுக்காக இப்படியொரு விஷயத்தை பதிவு செய்கிறாராம்..!

    என்னால் முடியாதது எதுவும் இல்லை.. சூரியின் வைரல் பேட்டி..!! குழந்தைகளுக்காக இப்படியொரு விஷயத்தை பதிவு செய்கிறாராம்..!

    சினிமா
    நயன்தாரா ஏன் வரவில்லை.. மேடையிலேயே வச்சி சம்பவம் செய்த ராதிகா..!! ‘ஹாய்’ வெற்றி விழாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!

    நயன்தாரா ஏன் வரவில்லை.. மேடையிலேயே வச்சி சம்பவம் செய்த ராதிகா..!! ‘ஹாய்’ வெற்றி விழாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..!

    சினிமா
    குண்டு கட்டாக வெளியேற்றம்... பேரவையில் பரபரப்பு.! திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு..!!

    குண்டு கட்டாக வெளியேற்றம்... பேரவையில் பரபரப்பு.! திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    #BREAKING பழனியில் அடுத்த அதிர்ச்சி...!! - இடும்பன் கோயிலில் வெள்ளி வேல் மாயம்... 142 கிராம் தங்கமும் திருடு போனதால் பரபரப்பு...!

    #BREAKING பழனியில் அடுத்த அதிர்ச்சி...!! - இடும்பன் கோயிலில் வெள்ளி வேல் மாயம்... 142 கிராம் தங்கமும் திருடு போனதால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    ஒருமுறை சார்ஜ் செய்தால் 669 கி.மீ.! BMW-ன் புதிய கார் அறிமுகம்..!! விலை என்ன?

    ஒருமுறை சார்ஜ் செய்தால் 669 கி.மீ.! BMW-ன் புதிய கார் அறிமுகம்..!! விலை என்ன?

    கேட்ஜெட்ஸ்
    எம்.எல்.ஏ. இல்லாத நேரத்தில் இப்படியா?... அரசு கட்டிடத்தை கட்சி ஆபீஸாக மாற்றிய தவெக நிர்வாகி... பெண்களுடன் அட்ராசிட்டி...!

    எம்.எல்.ஏ. இல்லாத நேரத்தில் இப்படியா?... அரசு கட்டிடத்தை கட்சி ஆபீஸாக மாற்றிய தவெக நிர்வாகி... பெண்களுடன் அட்ராசிட்டி...!

    அரசியல்

    செய்திகள்

    குண்டு கட்டாக வெளியேற்றம்... பேரவையில் பரபரப்பு.! திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு..!!

    குண்டு கட்டாக வெளியேற்றம்... பேரவையில் பரபரப்பு.! திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு..!!

    தமிழ்நாடு
    #BREAKING பழனியில் அடுத்த அதிர்ச்சி...!! - இடும்பன் கோயிலில் வெள்ளி வேல் மாயம்... 142 கிராம் தங்கமும் திருடு போனதால் பரபரப்பு...!

    #BREAKING பழனியில் அடுத்த அதிர்ச்சி...!! - இடும்பன் கோயிலில் வெள்ளி வேல் மாயம்... 142 கிராம் தங்கமும் திருடு போனதால் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ. இல்லாத நேரத்தில் இப்படியா?... அரசு கட்டிடத்தை கட்சி ஆபீஸாக மாற்றிய தவெக நிர்வாகி... பெண்களுடன் அட்ராசிட்டி...!

    எம்.எல்.ஏ. இல்லாத நேரத்தில் இப்படியா?... அரசு கட்டிடத்தை கட்சி ஆபீஸாக மாற்றிய தவெக நிர்வாகி... பெண்களுடன் அட்ராசிட்டி...!

    அரசியல்
    தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்... CPM பங்கேற்காது..! பாலகிருஷ்ணன் திட்டவட்டம்.!!

    தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்... CPM பங்கேற்காது..! பாலகிருஷ்ணன் திட்டவட்டம்.!!

    தமிழ்நாடு
    முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்காதது ஏன்? சபாநாயகர் விளக்கம்..!!

    முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்காதது ஏன்? சபாநாயகர் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    MLA ஜெயக்குமார் வெற்றிக்கு எதிர்ப்பு..! தோப்பு வெங்கடாசலம் மனு நிராகரிப்பு.! நீதிமன்றம் உத்தரவு.!!

    MLA ஜெயக்குமார் வெற்றிக்கு எதிர்ப்பு..! தோப்பு வெங்கடாசலம் மனு நிராகரிப்பு.! நீதிமன்றம் உத்தரவு.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share