விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக புதுச்சேரியில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக இந்து முன்னணி அளித்த புகாரின் பேரில் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, சனாதன கொள்கைக்கு எதிராகவே அவர் பேசியதாகவும், வெறுப்புப் பேச்சு ஏதுமில்லை என்ற வாதத்தை ஏற்றார். மேலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் உரிய அனுமதி பெறப்படாததைச் சுட்டிக்காட்டி, வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதுச்சேரி கம்பன் கலை அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வெறுப்பு கருத்துக்களை தெரிவித்ததாக இந்து முன்னணி பொதுச்செயலாளர் டிஎன் கண்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் புதுச்சேரி ஓகஞ்சாலை போலீசார் திருவாளவன் மீது வழக்கு பதிவு செய்தார்கள். புதுச்சேரி தலைமை குற்றிவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி விசிக தலைவர் திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: விசிக-வில் சீட் கிடைக்காத எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி!! கட்சி பதவி வழங்கி சரிகட்டும் திருமாவளவன்!!
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா முன்பாக விசாரணைக்கு வந்தபோது கல்விக்கு எதிரான சனாதன கொள்கை என்ற அடிப்படையிலேயே திருமாவளவன்
பேசியதாகவும் வெறுப்பு பேச்சு எதையும் அவர் பேசவில்லை எனவும் மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விக்கக்கூடிய பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ஆறு ஆண்டுகள் தாமதமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த வழக்கை தொடர முறையான அனுமதி பெறவில்லை எனவும் பார்வேந்தன் மற்றும் வழக்கறிஞர் தீபிகா ஆகியோர் திருமாவளவன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா திருமாவளவனுக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அண்ணன் திருமாவளவன் கூட திமுகவில் இருப்பதால் ... ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த தவெக தலைமை நிர்வாகி...!