• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மலைபோல் கரை ஒதுங்கிய சிலைகள்... களத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள்... விடிய விடிய நடந்தது என்ன?

    நேற்று இரவு முதல் மாநகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் தூய்மைப் பணியாளர்கள் எஞ்சியிருந்த சிலைகளின் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    Author By Amaravathi Mon, 21 Sep 2026 09:25:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai vinayagar chadurthi sanitary works

    சென்னையில் நேற்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்ட நிலையில், பட்டினப்பாக்கம் கடற்கரையில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

    விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் கரைக்கப்பட்டன.

    குறிப்பாக, பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய நான்கு இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. பல்வேறு அமைப்புகளின் சார்பில் மொத்தமாக 1,562 விநாயகர் சிலைகள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரைக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

    இதையும் படிங்க: விநாயகர் சிலையை கரைக்கப் போன இடத்தில் சோகம்... அடுத்தடுத்து 6 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி...!

    தற்போது பட்டினப்பாக்கம் கடற்கரையில் தேங்கியுள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரைப் பகுதிகளில் பூஜைப் பொருட்கள், மாலைகள், சிலைகளின் எஞ்சிய பாகங்கள், காகிதக் கலவைகள், மரக்கட்டைகள், இரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பெருமளவில் கழிவுகளாகக் கரை ஒதுங்கியுள்ளன.

    இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் கழிவுகளை அகற்றும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இயற்கை நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படியும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கடந்த ஆண்டு 77 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 100 டன் அளவிலான கழிவுகள் சேர வாய்ப்புள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி, தற்போது கழிவுகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் மாநகராட்சிக்குச் சொந்தமான வாகனங்களின் உதவியுடன் தூய்மைப் பணியாளர்கள் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக, விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு பல்வேறு வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளுடன் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டது.

    அந்த வகையில், தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்ட நிலையில், சிலைகளின் எஞ்சிய பாகங்கள் மற்றும் பிற பொருட்கள் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கழிவுகளாகத் தேங்கியுள்ளன.

    எனவே, அவற்றை அகற்றும் பணியில் தற்போது மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், காவல்துறை மற்றும் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆகியவற்றுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, உரிய வழிகாட்டுதல்களுடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டுள்ளன.

    சிலைகள் கரைக்கப்பட்ட உடனேயே, நேற்று இரவு முதல் மாநகராட்சி அதிகாரிகளின் மேற்பார்வையில் தூய்மைப் பணியாளர்கள் எஞ்சியிருந்த சிலைகளின் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று காலை நிலவரப்படி 70 டன்னுக்கும் மேலான கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த ஆண்டு சுமார் 100 டன் அளவிலான கழிவுகள் சேகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே பசுமைத் தீர்ப்பாயத்திற்கு மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    கடந்த ஆண்டு 77 டன் அளவிலான கழிவுகள் சேகரிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு சுமார் 100 டன் அளவிலான கழிவுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சியுள்ள கழிவுகளையும் முழுவீச்சில் அகற்றும் பணியில் மாநகராட்சியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் மட்டுமின்றி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் என பலரும் பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பட்டினப்பாக்கம் கடற்கரையில் தற்போது தேங்கியுள்ள கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன.

    இதையும் படிங்க: ஓட்டு கேட்டு வராதீங்க... தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமாவிற்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு...!

    மேலும் படிங்க
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு
    “பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?

    “பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?

    தமிழ்நாடு
    விடிந்ததுமே அதிரடி ஆக்‌ஷன்... பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கொடூரனை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    விடிந்ததுமே அதிரடி ஆக்‌ஷன்... பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கொடூரனை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    தமிழ்நாடு
    சிவபெருமான் கஞ்சா வாங்கச் சொன்னாரா?... காட்பாடியில் போதை சாமியார் சிக்கியது எப்படி?

    சிவபெருமான் கஞ்சா வாங்கச் சொன்னாரா?... காட்பாடியில் போதை சாமியார் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (22-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு மற்றும் கற்பனை சாதகமாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (22-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உள்ளுணர்வு மற்றும் கற்பனை சாதகமாக இருக்கும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு
    “பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?

    “பிரியமுடன் ச.ஜோசப் விஜய்”... விடிந்ததும் பெற்றோர்களுக்கு சி.எம். விஜய் அனுப்பிய சர்ப்ரைஸ் மெசேஜ்... என்ன தெரியுமா?

    தமிழ்நாடு
    விடிந்ததுமே அதிரடி ஆக்‌ஷன்... பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கொடூரனை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    விடிந்ததுமே அதிரடி ஆக்‌ஷன்... பெண் ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற கொடூரனை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    தமிழ்நாடு
    சிவபெருமான் கஞ்சா வாங்கச் சொன்னாரா?... காட்பாடியில் போதை சாமியார் சிக்கியது எப்படி?

    சிவபெருமான் கஞ்சா வாங்கச் சொன்னாரா?... காட்பாடியில் போதை சாமியார் சிக்கியது எப்படி?

    தமிழ்நாடு
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share