சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரத்தில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசும்போது, தேசியக்கொடி ஏற்றுவதைச் சட்டமீறலாகக் கருதும் அரசு நடவடிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கினார். ஒரே ஒரு அதிகாரிக்காகவே தலைநகரம் முடக்கப்பட்டுள்ளதாகவும், மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லை போன்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான முறைகேடுகள் குறித்து ஞானேஷ் குமார் மீது எழுந்த குற்றச்சாட்டுகளால் அவரது பதவி விலகலைக் கோரி சிஜேபி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அக்டோபர் 10 அன்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்ட நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. மும்பையிலிருந்து டெல்லி வந்த அபிஜீத் திப்கே உள்ளிட்ட தலைவர்கள் விமானத்திலேயே தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டாலும், போராட்டங்கள் தொடர்ந்தன.மாணவர் அமைப்பினர், எதிர்க்கட்சியினர் மற்றும் முன்னாள் முதல்வர்கள் வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்டதாக அபிஜீத் திப்கே குறிப்பிட்டார். இளைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் ஒரே ஒரு ஞானேஷ் குமாருக்காகவே எடுக்கப்படுவதாகக் கேள்வி எழுப்பினார். மோடிக்கு அவ்வளவு முக்கியமானவரா அவர் என்றும், தேர்தலில் மோடி வெற்றிபெற ஞானேஷ் குமார் உதவுகிறார் என ஏன் கருதக்கூடாது என்றும் கேட்டார். அவர் உதவாவிட்டால் ஏன் இவ்வளவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பதே அவரது முக்கியக் கேள்வியாக இருந்தது.ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பல கோடி பெயர்கள் நீக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்தன. டெல்லியில் ரயில்வே மற்றும் மெட்ரோ சேவைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையும், வெளிமாநிலப் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டதையும் அபிஜீத் திப்கே சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு..! எழும்பூரில் ரயில் மறியல்... குண்டுக்கட்டாக கைது..!!
தேசியக்கொடியை ஏற்றுவது கூட குற்றமாகக் கருதப்படுவதாக அவர் விமர்சித்தார்.இந்தப் போராட்டங்கள் நாடு முழுவதும் விரிவடைந்துள்ளன. பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அபிஜீத் திப்கே ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டம் தொடரும் என அறிவித்தார். அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்ப்பை அடக்குவதாகக் குற்றம்சாட்டிய அவர், மக்களின் அமைதியான போராட்ட உரிமையை மதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்த விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி போராட்டத்திற்கு செக்...! ஜந்தர் மந்திரில் போராட தடை..! காவல்துறை அறிவிப்பு..!