திருப்பூரில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடர்ந்து மேட்டுப்பாளையம் கூட்டத்திற்கு செல்வதற்காக வாகனத்தில் வந்தவர் திடீரென அவிநாசியில் இறங்கி சுமார் 600 மீட்டர் தூரம் மூன்று வீதிகளில் நடந்து ரோடு ஷோ சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவிநாசி (தனி) தொகுதி திமுக இளம் வேட்பாளர் டாக்டர் கோகிலாமணி மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் முதல்வருடன் நடந்து சென்றனர். சாலையோரத்தில் நின்று முதல்வரை வரவேற்ற பொதுமக்களிடம் வேட்பாளர் டாக்டர் கோகிலாமணியை காட்டி இவர் தான் வேட்பாளர் அவருக்கு வாக்களியுங்கள் என்று முதல்வர் முக ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். பொதுமக்களிடம் நலம் விசாரித்து நடந்து சென்றார்.
முதல்வருக்கு சாலையோர கடைகளில் இருந்து பழம் மற்றும் பூ வியாபாரம் செய்யும் பெண்கள் பழங்கள் மற்றும் பூ மாழையை கொடுத்தனர். அதை முதல்வர் புன்னகையோடு பெற்றுக்கொண்டதால் பெண்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: “தீ_பரவட்டும்...” - டெல்லிக்கு பயம் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... வைரலாகும் வீடியோ...!
திடீரென சாலையில் இறங்கி உற்சாகமாகவும் வேகமாகவும் முதல்வர் ரோடு ஷோ வாக நடந்து சென்று வாக்கு சேகரித்தது அவிநாசி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது.
இதையும் படிங்க: காலையிலேயே களத்தில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... நடைபயிற்சி சென்றபடி வாக்கு வேட்டை...!