தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் இந்த வருகை முக்கியத்துவம் வாய்ந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. 108 இடங்களைப் பெற்று பெரிய கட்சியாக உருவெடுத்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையிலான அரசு மே 10 அன்று பதவியேற்றது. இது தமிழ்நாட்டில் ஏறக்குறைய ஆறு தசாப்த கால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. பதவியேற்பு விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்ளரங்கில் நடைபெற்றபோது, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அடிப்படை வசதிகள் மேம்பாடு, குடிநீர் திட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் விஜய். சமீபத்தில் ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்துக்கான ஒப்பந்தம் மத்திய அரசுடன் கையெழுத்தானது.

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் விரிவாகப் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் டெல்லி சென்றடைந்த முதல்வர் விஜய்க்கு காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது. டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக இன்று மாலை 4 மணிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கிறார்.
இதையும் படிங்க: டெல்லியில் முதல்வர் விஜய்...! 2வது முறையாக டைரக்ட் VISIT..! காவல்துறை மரியாதையுடன் உற்சாக வரவேற்பு..!!
அதைத்தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை மாலை 5.45 மணிக்கு சந்திக்க இருக்கிறார். டெல்லியில் மாலை 6:30 மணிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திக்கிறார். இதை அடுத்து டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளார். பின்னர் ஜூன் பன்னிரண்டாம் தேதி முதல்வர் விஜய் உடுப்பி மூகாம்பிகை கோவிலில் தரிசனம் மேற்கொள்கிறார்.
இதையும் படிங்க: மீண்டும் "டெல்லி விசிட்"... தனி விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் விஜய்..!!