20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 46-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டும் விழா சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தற்போது தொடங்கியது.
சர்வதேச அளவில் சாதனைகளை நிகழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா சற்றுமுன் முறைப்படி தொடங்கியது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பதக்கம் வென்ற விளையாட்டு நட்சத்திரங்கள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற 37 தமிழக வீரர்களில் 14 பதக்கங்களை வென்று அசத்திய தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், டி.கே. விஷால், அபிநயா ராஜராஜன், பரணிகா இளங்கோவன் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், கமினி உள்ளிட்டோரும், உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, சவிதாஸ்ரீ ஆகியோரும் விழா அரங்கிற்கு வருகை தந்துள்ளனர்.
இதையும் படிங்க: தாய் மாமன் சீர் முதல் அண்ணன் சீர் வரை.. பெண்கள் யாரையும் சார்ந்து நிற்கக் கூடாது!! கனிமொழி எம்.பி பேச்சு..!!
தொடக்க நிகழ்வாக வரவேற்பு மற்றும் அறிமுக உரையைத் தொடர்ந்து, சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 8 கோடியே 57 லட்சம் மதிப்பிலான உயரிய ஊக்கத்தொகையினை முதலமைச்சர் விஜய் நேரில் வழங்க உள்ளார். தொடர்ந்து வீரர்களுக்கு சிறப்பு விருந்தும் அளிக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: பெரம்பூர் தேர்தல் வழக்கு! முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு!