மெட்ரோ ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டம் நகரின் போக்குவரத்து நெரிசலை கணிசமாகக் குறைக்கும் பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு திட்டமாக உருவெடுத்துள்ளது. 118.9 கிலோமீட்டர் நீளத்துக்கு மூன்று முக்கிய வழித்தடங்களுடன் 128 நிலையங்களைக் கொண்ட இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் 63,246 கோடி ரூபாய் ஆகும்.
முதல் கட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2024-இல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற இந்தத் திட்டம், 2026 முதல் 2028 வரை படிப்படியாகப் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மொத்தப் பணிகள் சுமார் 52-55 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டத் திட்டத்தில் மூன்று முக்கிய வழித்தடங்கள் உள்ளன.

தமிழக முதல்வர் விஜய் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். நந்தனம் மெட்ரோ அலுவலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொள்கிறார். அதற்காக ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்து நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தை அடைந்தார்.
இதையும் படிங்க: மருத்துவ படிப்பில் தமிழகத்தின் இடங்கள் இழப்பு...; சரண்டர் ஆனது ஏன்..? தவெக அரசை பூந்து விளாசிய ஸ்டாலின்..!!
ஓமந்தூரார் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நந்தனத்திற்கு முதல்வர் விஜய் டிக்கெட் எடுத்து பயணித்தார். தொடர்ந்து நந்தனம் மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வருகை தருகிறார் என்பதை அறிந்த மக்கள் அவரை பார்ப்பதற்காக காத்திருந்தனர். முதல்வர் விஜயை கண்டதும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். போரூர் - பூந்தமல்லி இடையே ஆளில்லா மெட்ரோ ரயில் இயக்கம் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். மேலும் கத்திப்பாராவில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகளையும் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இதையும் படிங்க: சத்துணவுத் திட்டத்தில் சிக்கன் பிரியாணி சேர்க்கப்படுமா? முதலமைச்சர் விஜய் பரிசீலனை..!!