தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரின் ஒரு முக்கிய நாளில், முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆளுநர் உரைக்கான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்துப் பேசியபோது, அவை முழுவதும் பரபரப்பான சூழல் உருவானது. குறிப்பாக, முந்தைய ஆட்சியில் டாஸ்மாக் உள்ளிட்ட துறைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் 'பார்ட்டி பண்ட்' என்ற பெயரில் நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்த அவரது கருத்துக்கள் எதிர்க்கட்சியினரிடையே பெரும் ஆட்சேபத்தை ஏற்படுத்தின.
முதல்வர் விஜய் தனது உரையில், தனது அரசு ஊழலை ஒழிக்கும் வகையில் செயல்படும் என்று உறுதியளித்தார். "நிர்வாக திறமை என்றால் ஒன்றன் பின் ஒன்றாக ஊழல் செய்துவிட்டு பொறுப்பேற்காமல் தப்பித்துக்கொள்வது என்றால், இந்த அரசு அப்படிப்பட்ட ஊழல் நிர்வாகத்தில் ஈடுபடாது" என்று கூறினார். மேலும், டாஸ்மாக் வருமானத்தில் 'பார்ட்டி பண்ட்' பெயரில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் அரசு கருவூலத்துக்கு திரும்பக் கொண்டுவரப்படுவதாகவும், பல துறைகளில் இதேபோல் மீட்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் இருந்து அப்போது திமுக வெளிநடப்பு செய்தது. இதனை இன்று கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் சுட்டிக்காட்டி பேசினார். பார்ட்டி ஃபண்ட் என்று சொன்னவுடன் எடுத்தாங்க பாருங்க ஒரு ஓட்டம் என்று கலாய்த்தார். திமுகவும் அதிமுகவும் மாறி மாறி இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார். திமுக டிசைன் டிசைனாக குறை சொல்வதாகவும் கட்சி நிதி என்ற பெயரில் துறைவாரியாக கொள்ளையடித்திருப்பதாகவும் தெரிவித்தார். குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறு என்று இருக்கும் என்றும் அப்பா என்பதை சுட்டிக்காட்டியும் பேசினார்.
இதையும் படிங்க: வாய்னு இருந்தா எப்படி வேணா பேசுவீங்களா..? கரூர் துயரம்..! மனவேதனையை வெளிப்படுத்திய முதல்வர் விஜய்..!!
சென்னையில ஒரு பாலம் கட்டுவதற்காக நார்மலா ஆகிற செலவைவிட அதிக செலவில் கிட்டத்தட்ட டபுள் மடங்கு செலவுல ஒரு டெண்டர் ஒன்னு விட்டுருக்காங்க., அது எல்லாம் தோண்டி எடுத்து அதெல்லாம் இப்போ கண்டுபிடிச்சு கேன்சல் பண்ணி இருக்கிறோம். இன்னும் எத்தனை கோடி ஊழல் எத்தனை லட்சம் ஊழல் தோண்ட தோண்ட வருமோ எங்களுக்கே தெரியல., ஒவ்வொரு முகமூடியா கிழியுது… ஐயோ “இந்த விஜய் ஒவ்வொரு கதையா எடுத்து வெளியில விற்றுவான் போலையே”., என்று திரும்பும் பக்கம் எல்லாம் கதறல் கேட்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெசவாளர் நெஞ்சம் குளிர...! முதல்வர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி.. புகழ்ந்து வரவேற்ற அமைச்சர் விஜயலட்சுமி..!!