முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முக்கிய அமைச்சரவைக் கூட்டமாக இது பார்க்கப்படுவதால், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தக் கூட்டத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சர்கள் விரிவாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். வரவிருக்கும் பட்ஜெட்டில் இடம்பெற உள்ள புதிய நலத்திட்டங்கள், துறை வாரியான நிதி ஒதுக்கீடுகள், வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசின் முக்கிய அறிவிப்புகள் குறித்து அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் த.வெ.க. அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இம்மாத இறுதியில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால், தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் எந்த அளவிற்கு பட்ஜெட்டில் இடம்பெறும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இதையும் படிங்க: நவோதயாவுக்கு NO..! தமிழ்நாட்டுக்கு என்ன பிரச்சனை..? 3 வாரம் கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்..!
இந்த நிலையில், ஊழல் புகார்களின் சிக்கினால் பதவி பறிக்கப்படும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊழல் மற்றும் முறைகேடு புகார்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விஜய் தெரிவித்து இருக்கிறார். தமிழக வெற்றி கழக ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். மேலும் பள்ளிகளுக்குள் ரீல்ஸ் எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் முதல்வர் விஜய் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: தரமற்ற உணவுக்கு CHECK..! விடுதி காப்பாளர்களுக்கு சமூகநீதி துறை அதிரடி உத்தரவு..!