முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 10-ம் தேதி அவர் பிரிட்டன் செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு, 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பதுதான் அவரது இலக்காக உள்ளது. இந்த 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை தொழில்துறை முதலீடுகள் மூலமாக தமிழ்நாடு எட்ட வேண்டும் என்பதற்காக, தொழில்துறை சார்பில் பல்வேறு முயற்சிகளும் முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு, இந்த 100 நாட்களில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்வும் நடைபெற்று முடிந்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING மேட்டூர் அணையை திறக்க புறப்பட்டார் விஜய்... இன்று முதலமைச்சருடைய முழு பிளான் இதுதான்...!
இந்த நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில்துறை அமைச்சர் வரும் 4-ம் தேதி தைவான் நாட்டுக்கும், வரும் 10-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கும் பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென் மாநிலங்களில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் மற்றும் ஆந்திரா இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
செமிகண்டக்டர் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளில் ஈடுபட்டுள்ள பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் செமிகான் மாநாடு இந்த வாரம் தைவானில் நடைபெறுகிறது. தைவானில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சர் கலந்து கொள்ள உள்ளார். தொழில்துறையின் முக்கிய அதிகாரிகளும் அவருடன் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
தைவானில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்று, அங்குள்ள நிறுவனங்களின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.
அதேபோல், முதலமைச்சர் விஜய் தலைமையில் தொழில்துறை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவினர் வரும் 10-ம் தேதி கிரேட் பிரிட்டன் செல்ல இருப்பதாகவும், அந்தக் குழுவினர் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வரும் 16-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் பயணத்தின்போது அந்நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் தாவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக தொழில்துறை அமைச்சர் தென்கொரியா சென்று கப்பல் கட்டும் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக முதலமைச்சர் விஜய் வெளிநாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது கூடுதல் தகவலாகும்.
விவரங்களுக்கு நன்றி மணிகண்டன்.
இதையும் படிங்க: மேட்டூர் பயணம்... சி.எம்.விஜய்க்கு உளவுத்துறை கொடுத்த வார்னிங்... கோடிகளை கொட்டி நடந்த ஏற்பாடு...!