நேற்றைய தினம் கோவை மாவட்டம் சூலூரில் பள்ளி மாணவி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் என்பவருக்கு வலது கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான கார்த்திக், நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். கடந்த 15 ஆண்டுகளாக சூலூர் பள்ளபாளையம் பகுதியில் வசித்து வந்த அவர், கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் வீட்டிற்கு அருகிலேயே வசித்து வந்த கார்த்திக்கை காவல்துறையினர் நேற்று மாலை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கார்த்திக்கை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டிருந்த போது, காவல்துறையினரின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. கண்ணம்பாளையம் அருகே உள்ள பழைய கட்டிடத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்து தப்ப முயன்ற போது, அவருக்கு வலது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10 வயது சிறுமி மரணத்தில் நடுங்கவிடும் திருப்பம்... சிக்கிய காமக்கொடூரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்... நடந்தது என்ன?
உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, கைதிகளுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் முதலுதவி அளிக்கப்பட்டு, கை மற்றும் காலில் கட்டு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியான மோகன், சூலூர் நீதிபதியின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
காவல்துறையினரின் விசாரணையில், சிறுமி விளையாடிக் கொண்டிருந்த இடத்திலிருந்து கார்த்திக் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, குளக்கரையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. தற்போது, காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்ற போது கீழே குதித்ததால் காயமடைந்த கார்த்திக்கிற்கு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING கோவை சிறுமி கொலை வழக்கில் 2 பேர் கைது... பக்கத்திலேயே இருந்த முக்கிய குற்றவாளி சிக்கியது எப்படி?