சி. விஜயபாஸ்கர் தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றியவர் என்றாலும், ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக இருப்பதால் அவருக்கு இதில் தனிப்பட்ட ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியைச் சேர்ந்த இவருக்கு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பது ஒரு பெரும் பொழுதுபோக்காகவும், பாரம்பரியத்தைப் பேணும் செயலாகவும் இருந்து வருகிறது.
அவர் தனது வீட்டில் பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாகப் பயிற்சி அளித்து வளர்த்து வரும் காளைகளைப் பல போட்டிகளில் களமிறக்கி வருகிறார். குறிப்பாக "கொம்பன்" தொடர்பான பெயர்களில் அவர் வளர்த்த காளைகள் பிரபலமானவை. "வெள்ளைக் கொம்பன்" (வெள்ளையன்), "கருப்புக் கொம்பன்", "சின்னக் கொம்பன்" போன்ற பெயர்களில் அவர் செல்லமாக வளர்த்த காளைகள் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர், சூரியூர் உள்ளிட்ட பிரபல ஜல்லிக்கட்டு மைதானங்களில் பங்கேற்று பல வெற்றிகளைப் பெற்றுள்ளன.

இவற்றில் மிகவும் புகழ்பெற்றது "வெள்ளைக் கொம்பன்" காளை. இது பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு களத்தில் தன் வீரத்தை நிரூபித்து, மாடுபிடி வீரர்களை திணறடித்து பல பரிசுகளை வென்றெடுத்தது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் சால பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: ராமதாசுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை..! OPS ஐக்கியமா? செங்கோட்டையன் பேட்டி..!
எடப்பாடி பழனிச்சாமி கொடி அசைத்து தொடங்கி வைத்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த போட்டியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் காளையும் பங்கேற்றது. சீறிப்பாய்ந்த காளையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கண்டு களித்தனர்.
இதையும் படிங்க: மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்..! EPS அறிவிப்பு..!