விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் C. விஜயபாஸ்கர், தன்னை அடையாளப்படுத்தி அமைச்சராக்கிய அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் ஐக்கியமாகியுள்ளார். அதிமுகவின் மிக முக்கிய முகமாக அறியப்பட்ட விஜயபாஸ்கர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதிமுகவில் இருந்து ஏராளமான முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் பர்வேசை சி விஜயபாஸ்கர் சொந்தம் கொண்டாடி பேசியதை புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சனம் செய்துள்ளார். 2011-இல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தை வசைபாடியும், ஜெயலலிதாவின் புகழ் பாடியும் அமைச்சரான பெருமகனார் தான் விஜயபாஸ்கர் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இணைப்பு கூட்டத்திலும், இன்று புதுக்கோட்டை தவெக அலுவலகத் திறப்புப் பத்திரிகையாளர் சந்திப்பிலும், தனக்குப் பெரும் இடையூறாக இருக்கக்கூடியவர் எனக் கருதப்பட்ட தவெக அமைச்சர் பர்வேசை புகழ்ந்து பாடினால் மட்டுமே தான் நுழைய முடியும் என்ற நிலையில், அவர் ஒரு படி மேலே சென்று, "என் அன்பு மாப்பிள்ளை பர்வேஸ்" என்று சொந்தம் கொண்டாடியது, அளவுக்கு மீறிய, மரபுக்கு மீறிய புகழுரையாகவே பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: C. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீதான குட்கா முறைகேடு வழக்கு..! 3 மாசம் தான் டைம்..! நீதிமன்றம் கெடு..!
மாமன், மச்சான், மாப்பிள்ளை, அத்தான், பேரப்பிள்ளை போன்ற உறவு முறைகள், இரத்த உறவு முறைகள் நான்கு சுவற்றுக்குள், குடும்பத்திற்குள் வைத்து கொண்டாடப்பட வேண்டுமே தவிர, பொதுவெளியில் வெளிப்படுத்துவதும், அடையாளப்படுத்துவதும் அரசியல் நாகரிகமாகாது என்றும் அவை சாதிய மற்றும் மத ரீதியான குறியீடுகளாகவே கருதப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வழக்குகளுக்கு பயந்து தவெகவுக்கு தாவலா?... விஜயபாஸ்கர்கள் மேல் உள்ள வழக்குகள் என்னென்ன?