• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இனி புக் பண்ணா 10 நிமிஷத்துல.. வீடு தேடி வரும் சிலிண்டர்..!! HPCL உடன் கைகோர்த்த இன்ஸ்டாமார்ட்..!!

    முதற்கட்டமாக பெங்களூருவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Wed, 15 Jul 2026 16:55:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cylinder-delivery-in-just-10-minutes-instamart-is-here

    ஆன்லைன் தளங்கள் மூலம் விரைவான வீட்டு விநியோக சேவையை வழங்கி வரும் ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் சேவை, தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. இதற்காக இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாக ஸ்விக்கி அறிவித்துள்ளது.

    முதற்கட்டமாக இந்த புதிய சேவை கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள வாடிக்கையாளர்களின் வரவேற்பு மற்றும் பயன்பாட்டை மதிப்பீடு செய்த பிறகு, சென்னை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் இந்த சேவையை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மளிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை குறுகிய நேரத்தில் வழங்கி வந்த இன்ஸ்டாமார்ட், தற்போது சமையல் எரிவாயு விநியோகத்தையும் தனது சேவையில் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

    இந்த சேவையின் மூலம் 10 கிலோ எடையுள்ள HP Navya காம்போசிட் சிலிண்டர் மற்றும் சிறிய தேவைகளுக்கான 5 கிலோ எடையுள்ள வழக்கமான மெட்டல் எல்பிஜி சிலிண்டர் ஆகிய இரு வகைகளும் கிடைக்கும். குறிப்பாக, இந்த சிலிண்டர்களை வாங்குவதற்கு ஏற்கனவே எல்பிஜி இணைப்பு வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் புதிய பயனாளர்களும் எளிதாக இந்த சேவையைப் பயன்படுத்த முடியும்.

    இதையும் படிங்க: பிரச்சனை தீர்ந்தாச்சு..!! ஆனாலும் விலை குறையாத சிலிண்டர்..!! வணிகர்கள் கவலை..!!

    Cylinder

    மேலும், முதல் முறையாக சிலிண்டர் வாங்கும் போது காலி சிலிண்டரை ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை. அதன் பிறகு நடைபெறும் மாற்று சிலிண்டர் விநியோகங்களில் மட்டும் காலி சிலிண்டரை வழங்கி புதிய சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம் என்ற நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி, குறிப்பாக மாணவர்கள், வேலைக்காக வேறு நகரங்களில் வசிக்கும் இளைஞர்கள், வாடகை வீடுகளில் தங்கியிருப்போர் மற்றும் சிறிய குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இந்துஸ்தான் பெட்ரோலியத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் உரிய பயிற்சி பெற்ற பணியாளர்கள் மூலமாகவே சிலிண்டர்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக விநியோகிக்கப்படும் என்று நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. விரைவான டெலிவரி, எளிய ஆர்டர் நடைமுறை மற்றும் பாதுகாப்பான சேவை ஆகியவற்றின் மூலம் நகர்ப்புற மக்களுக்கு மேலும் ஒரு வசதியான சமையல் எரிவாயு விநியோக மாற்றாக இந்த புதிய சேவை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பிரச்சனை தீர்ந்தாச்சு..!! ஆனாலும் விலை குறையாத சிலிண்டர்..!! வணிகர்கள் கவலை..!!

    மேலும் படிங்க
    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... " மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் என அறிவுறுத்தல்!

    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்... " மக்கள் அச்சப்பட வேண்டாம்" - மாவட்ட ஆட்சியர் என அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    ஒடிசா, ஜார்க்கண்டில் புதிய ரயில் தடம்: பொருளாதாரப் புரட்சிக்கு வித்திடும் எனப் பிரதமர் பெருமிதம்!

    இந்தியா
    "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

    "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

    தமிழ்நாடு
    உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம்! – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

    உட்கட்சி பூசலுக்கு பாஜகதான் காரணம்! – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

    இந்தியா
    விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    விரைவில் கேரளா செல்லும் முதல்வர் விஜய்.. கேரள உள்துறை அமைச்சர் தகவல்..!

    தமிழ்நாடு
    3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு... ஆகஸ்ட் 4க்குள் விளக்கம் கேட்டு ஐகோர்ட்!

    3ம் பாலினத்தவர்களுக்கு அரசு வேலை ஒதுக்கீடு... ஆகஸ்ட் 4க்குள் விளக்கம் கேட்டு ஐகோர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் 3.0 ரிக்டர் நிலநடுக்கம்...

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share