திண்டுக்கல் அருகே வாக்கு சேகரிக்க சென்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை குடிநீர் கேட்டு கேள்விகளால் துளைத்தடுத்த மக்கள். ஆத்திரமடைந்து என்னை பேச விடுங்கம்மா என்று கோபமாக கத்திய திண்டுக்கல் சீனிவாசன்.
தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 8 தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் வேட்பாளர்கள் அனல் பறக்கும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் அதிமுக சார்பில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று 15.04.26 இரவு திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட நந்தனார்புரம் ,காந்தி நகர், செட்டி நாயக்கன்பட்டி கிராமம் ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்..
முன்னதாக காந்திநகர் காலனியில் வாக்கு சேகரித்த போது சீனிவாசனின் வந்த பிரச்சார ஜுப்பை சூழ்ந்த அப்பகுதி மக்கள் பல வருடங்களாக எம்எல்ஏவாக இருந்தும் குடிநீர், சமுதாயக்கூடம் போன்றவை செய்து கொடுக்கவில்லை என கேள்வி கேட்டனர்.
இதையும் படிங்க: இப்படிப்பட்டவங்க தான் ஓட்டு கேட்டு வரனும்... ஐ.பெரியசாமி குடும்பத்தையே சீண்டிய திண்டுக்கல் சீனிவாசன்... !
தொடர்ந்து கேள்விக்கணைகளை தொடுத்த மக்களால் திண்டுக்கல் சீனிவாசன் பதில் சொல்ல முடியாமல் திணறினார். ஒரு கட்டத்தில் கோபமான திண்டுக்கல் சீனிவாசன் ஏம்மா என்ன பேச விடுங்க இப்ப நான் பேசவா வேண்டாமா ஒரு கட்டுப்பாடு இல்லாம பேசுறீங்களே என ஒருமையில் பேசினார்.
திண்டுக்கல் சீனிவாசன் கோபம் ஆனதால் அருகில் இருந்த செட்டிநாயக்கன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜ் மைக்கை வாங்கி விரைவில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தரப்படும் என்றார்.
ஆனாலும் பத்து வருடங்களாக எம்எல்ஏவாக இருந்தும் இதுவரை செய்து தராதது ஏன் என கேட்க.. நாங்கள் எதிர்க்கட்சி ஆளும் கட்சியிடம் கேளுங்கள் என்றார். ஆனால் நீங்கள் தானே எம்எல்ஏ என மக்கள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியதால் பிரச்சாரத்தை விரைவாக முடித்துவிட்டு திண்டுக்கல் சீனிவாசன் புயல் வேகத்தில் கிளம்பிச் சென்றார்.
இதையும் படிங்க: சிபிஐ விசாரணை வளையத்தில் செந்தில் பாலாஜி... திண்டுக்கல் சீனிவாசன் கொடுத்த பளீச் பதில்...!