கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா மிகச் சிறப்பாக நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் கழகம் தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான கழக முப்பெரும் விழா கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு, நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், முப்பெரும் விழா நடைபெறவுள்ள புதிய தேதி மற்றும் நேரம் குறித்த முக்கிய அறிவிப்பைத் தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 19.09.2026 (சனிக்கிழமை) அன்று மாலை சரியாக 5.00 மணியளவில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் முப்பெரும் விழா மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: தமிழக தரமே போச்சு... அவமரியாதை..! முதல்வர் விஜயை விளாசிய அப்பாவு..!!
கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்குதல் மற்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேருரை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இவ்விழாவில் இடம்பெறவுள்ளதால், மாநிலம் முழுவதிலும் இருந்து கழக நிர்வாகிகள், முன்னணியினர் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாகப் பங்கேற்கத் தயாராகி வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!