தமிழத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் சுவரில் உதயசூரியன் சின்னத்தை ஆங்காங்கே வரைய வேண்டும், நாலுமுனைப் போட்டி உள்ளதால் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென நிர்வாகிகளுக்கு திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி அறிவுறுத்தி உள்ளார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பொருப்பாளர் கெளதமசிகாமணி, திமுக விக்கிரவாண்டி எம் எல் ஏ அன்னியூர் சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி சுவரில் சின்னத்தை ஆங்காங்கே வரைய வேண்டும், இப்போது நாலுமுனைப் போட்டி உள்ளது. அதில் ஒருத்தர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுட்டாங்க, மற்றவர்கள் இனிமேல் தான் அறிவிப்பார்கள். ஆகவே யார் அறிவிச்சாலும் தேர்தல் வேலையச் சுறுசுறுப்பா செய்யனும் என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!
திமுக பணியை அடித்துக்கொள்ளுவதற்கு எந்தக் கட்சியாலும் முடியாது என்பதுதான் உண்மை தேர்தல் துவங்கிவிட்டது என்ற உணர்வோடு அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் ஒவ்வொரு நாளும் 50 பேரை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
தேர்தல் நேரத்தில் நாம வாக்குபதிவு மையத்தில உட்கார்ந்திருக்கும்போதே எத்தனை ஓட்டு போடப்பட்டு இருக்கிறது என கணக்கெடுத்து வச்சிருப்போம் அப்போ இறுதியாக 500 ஓட்டு போடாம இருந்தால் பிரிச்சி போடலாம் என தெரிவிப்பார்கள் அது நடக்காம பார்த்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!