தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விமர்சித்துப் பேசியதற்கு, மதுரையில் உள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோடி ரசிகர்களைத் தாண்டித் தமிழ் மக்கள் நேசிக்கும் தலைவர் ரஜினியைப் பற்றி ஆதவ் அர்ஜுனா பேசியது எங்களுக்கு ஈட்டியால் குத்துவது போல் உள்ளது என ரசிகர்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.
எங்கள் தலைவர் ரஜினி எங்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்துள்ளார். ஆனால், மூளை வளர்ச்சி இல்லாத ஆதவ் அர்ஜுனா, தன்னுடைய வழியில் எல்லோரையும் கொண்டு செல்வது தவறானது எனக் குறிப்பிட்டனர். விஜய்க்கு அரசியல் கட்டமைப்பே இல்லை. அவர் மூளை வளர்ச்சி இல்லாத, விளையாட்டுத் தனமான அரசியலைச் செய்து வருகிறார்" எனத் தவெக தலைவரையும் அவர்கள் கடுமையாகச் சாடினர்.
ரஜினியுடன் தான் 45 ஆண்டுகள் உடன் இருந்ததாகச் சென்னை அசோக் சொல்வது பொய். ரசிகர்கள் மன்றத்தில் அவர் என்ன தியாகியா? அவருடன் ஒன் டூ ஒன் விவாதிக்கத் தயார் என ரசிகர்கள் சவால் விடுத்தனர். உயர்ந்த பதவியில் வர வேண்டும் என்று நினைக்கும் விஜய் உதவாத ஆட்களையும் சில் வண்டுகளையும் உடன் வைத்துள்ளார். சென்னை அசோக் தயார் செய்த ஸ்கிரிப்டை வைத்து ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார் எனக் குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க: திமுக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி.. அது அதிமுகவுக்கு சாதகமாக அமையும் ..!! ஒரே போடாக போட்ட ராஜேந்திர பாலாஜி..!!
தலைவர் ரஜினி உத்தரவிட்டால், வரும் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் விஜய்க்கு எதிராக வாக்களிப்போம். தற்குறிகளை வைத்து எங்களைச் சீண்ட நினைத்தால், விஜய்க்கு கெட்ட நேரம் தொடங்கியுள்ளது என்று அர்த்தம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆதவ் அர்ஜுனா பல இடங்களில் குழப்பம் செய்து, பல குடும்பங்கள் இவரால் வீணாகியுள்ளன. இவர்கள் வாக்கு கேட்க வந்தால் தமிழ்நாடு பின்னுக்குச் செல்லும்" எனத் தெரிவித்தனர். ரஜினிகாந்தை ஆதரித்துப் பேசிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் மதுரை ரஜினி ரசிகர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: நம்மளோட தலைமையில்தான் ஆட்சி! இஃப்தார் விருந்தில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்!