தமிழ்நாட்டின் அரசியல் களம் சமீபகாலமாக கடும் பதற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு எதிராக வைத்த கடுமையான பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தப் பேச்சு தொடர்பாக போலீசார் அவரைக் கைது செய்து, தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் எதிர்க்கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவில்பட்டியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜயின் சமீபத்திய கருத்துகளுக்கு பதிலடியாக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். “தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு வெட்கமில்லையா? நாங்கள் கோமாளிகளா? சட்டமன்றத்தைக் கூட்டுங்கள், அப்போது உங்கள் எலும்பு முழுதும் உடைந்த நிலையில்தான் திரும்ப அனுப்புவோம்” என்பது உள்ளிட்ட வார்த்தைகளை அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேச்சு வீடியோவாகப் பரவியதைத் தொடர்ந்து, புகார் அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்து, ஜூலை 20, 2026 அன்று அதிகாலையில் விளாத்திகுளத்தில் உள்ள மார்க்கண்டேயனின் இல்லத்தில் இருந்து அவரைக் கைது செய்தனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க: "தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்"..! ஆக.3 ல் கர்நாடகா செல்லும் CM விஜய்...! அமைச்சர் வினோத் பேட்டி..!!
அப்போது, கரூர் சம்பவத்தை பார்த்து கண்ணீர் வரல.. ஆனால், ஜனநாயகன் படம் பார்த்து த.வெ.க அமைச்சர்கள் கண்ணீர் வடித்ததாக முன்னாள் அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். எலும்பை உடைப்பேன்னு சொன்னதுலாம் ஒரு குற்றமாகவே வராது என்று கூறினார். நேருக்கு நேர் பேசினாரா? அப்போ சட்டமன்ற கதவுகளை சாத்துவேன்னு சொன்னது மட்டும் சரியா? என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: விண்வெளித் துறையில் புதிய உச்சத்தை எட்டிய இந்தியா..!! பிரதமர் மோடி பெருமிதம்..!!