தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்து இரு நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக நேற்று முன்தினம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனிமே தான் ஆட்டமே இருக்கு... உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை... வெளுக்கப்போகுது மழை...!
இதனால் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவு தெரியாத வண்ணம் அதையும் தாண்டி தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுகிறது.
இதனால் அருவிக் கரைக்கு செல்வதற்கும், அருவிகளில் குறிப்பதற்கும் பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அருவி கரையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
நெல்லை அருவிகளில் குளிக்க தடை:
அம்பாசமுத்திரம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவியில் கனமழை காரணமாக கா ட்டாற்று வெள்ளம் அதிகரிப்பால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான அம்பாசமுத்திரம், ராதாபுரம், வள்ளியூர், கங்கைகொண்டான், தாழையூத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று முதல் நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் அம்பாசமுத்திரம் பகுதிக்கு உட்பட்ட மலைப்பகுதிகளாக இருக்கக்கூடிய காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து போன்ற பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் மழை பதிவாகியது.
இதனைத் தொடர்ந்து காட்டாற்று வெள்ளமும் அதிகரித்தது. இதனால் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட சுற்றுலா தலங்களான மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி 2 அருவிகளிலும் அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்திருக்கின்றனர்.
குறிப்பாக மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளம் காரணமாக 6வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் காட்டாற்ற வெள்ளம்:
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு மீன்வெட்டிபாறை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு- தொடர் மழை பெய்து வருவதால் செண்பகத்தோப்பு பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பகல் 12 மணிக்கே கடையெல்லாம் மூடுங்க.. புதுவை அரசு அதிரடி உத்தரவு