எண்ணூர் துறைமுகம் முதல் மாமல்லபுரம் வரை 6 வழி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது . இரண்டு கட்டப் பணிகள் நடைபெற்ற முடிந்த நிலையில், மூன்றாம் கட்ட சாலை பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து, வணிக சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த மாநில அரசு சார்பில் பல உயர்மட்ட சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் வரை செல்லும் சுமார் 133 கிலோமீட்டர் நீளத்திற்கு சென்னை எல்லை சாலைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்டப்பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், தற்போது திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை சுமார் 30.1 கிமீ 6 வழி சாலை நில எடுப்பு பணிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் முடிவுற்று உள்ளன.
இதையும் படிங்க: மே தினம்..! செஞ்சட்டை அணிந்து செவ்வணக்கம் செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்..!

இறுதி மற்றும் மூன்றாம் கட்ட சாலை பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சாலை பணிகளை துவக்கி வைத்த துணை முதலமைச்சர் திட்ட பணிகளுக்கான புகைப்படங்களை பார்வையிட்டார். அவருடன் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மீண்டும் அமைச்சரவையில் இடம்..! முதல்வருக்கு மனதார நன்றி கூறிய மனோ தங்கராஜ்..!