அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன் முழு மாநில அளவிலான பரப்புரை சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த இறுதிக் கட்ட பரப்புரை ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 19ஆம் தேதி வரை நீடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு முக்கிய பகுதியாக, ஏப்ரல் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் சென்னையில் தீவிர இரண்டு நாள் பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார்.இந்த இரண்டு நாட்களின் பரப்புரை சென்னை நகரின் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளை குறிவைத்து தீவிரமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகரம் தேர்தல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுவதால், இங்கு பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் சூழலில், அதிமுகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் இந்த பரப்புரை அமையும். சென்னையில் வரும் எட்டு மற்றும் ஒன்பது ஆகிய தேதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 210 தொகுதிகளில் நாங்க தான்... அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்..! இபிஎஸ் உறுதி..!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் எட்டாம் தேதி பரப்புரை மேற்கொள்கிறார். ஏப்ரல் எட்டாம் தேதி காலை 8:00 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார்
.
இதையும் படிங்க: வந்தாச்சு தேர்தல்..! கடைசி நாள்..! அதிமுக பொதுச் செயலாளர் EPS இன்று வேட்பு மனுத்தாக்கல்..!!