தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் 21, 2026 அன்று காலை ஒரு முக்கிய வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ தேர்தல் பிரசாரத்தின் இறுதிக் கட்டத்தில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அனல் பறக்கும் பிரசாரம் இன்றுடன் முடிவுக்கு வரும் சூழலில், வாக்காளர்களை நேரடியாக அணுகும் வகையில் அமைந்துள்ள இந்த வீடியோ செய்தி ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வீடியோவில் எடப்பாடி பழனிசாமி தொடக்கத்தில் இருந்தே உணர்ச்சிபூர்வமாகப் பேசுகிறார். “வாக்குரிமை என்பது நம் தலையெழுத்தை மாற்றும் ஜனநாயக ஆயுதம்; அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்” என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையை நினைவூட்டும் விதமாக அவர் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். மேலும், “தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கான இறுதி யுத்தம் இது” என்று உறுதியுடன் அறிவிக்கிறார்.

இந்தத் தேர்தலை தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான போராட்டமாக அவர் கூறியுள்ளார். திமுக ஆட்சியின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் எடப்பாடி பழனிசாமி, “கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் திமுக அரசு ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறது” என்று குறிப்பிடுகிறார். இந்தக் கடன் சுமை தமிழக மக்களின் தலையில் பெரும் பாரமாக அமைந்துவிட்டதாகவும், எந்தப் பெரிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்றும் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: நமக்காக பிரசாரம் பண்ணுறாங்க!! பிரேமலதாவுக்கு நன்றி!! உண்மை உறங்காது என அடித்து ஆடும் இபிஎஸ்!
இந்தப் புள்ளிவிவரத்தை அவர் தேர்தல் களத்தில் அடிக்கடி எடுத்துரைத்தாலும், இந்த வீடியோவில் அதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிக்கும் பகுதியில், “தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வன்முறை காடாக மாறி விட்டது” என்று தெரிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போனதாகவும், பெண்கள் உட்பட அனைவரும் பாதுகாப்பின்றி வாழ்கின்றனர் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். இந்த விமர்சனம் தேர்தல் பிரசாரத்தில் அதிமுகவின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: பாமகவில் நடக்கும் குழப்பத்திற்கு ஸ்டாலினும், சபரீசனும் தான் காரணம்! அன்புமணி பகீர் குற்ற்ச்சாட்டு!