நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 125 நாள் வேலை வாய்ப்பு கொடுக்கும் திட்டத்தை எதிர்க்கும் திமுக அரசை கண்டித்து திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்பு அதிமுக அறிவித்த திட்டங்களால் பயந்த திமுக அரசு இரவோடு இரவாக ஐந்தாயிரம் ரூபாய் அறிவித்துள்ளது திமுக அரசு இன்னும் 41 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு வழங்க வேண்டும் என தங்கமணி கடுமையாக விமர்சித்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கிராமப்புற மக்களின் 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து இன்று பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இரா முருகேசன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான பி தங்கமணி பேசினார் அவர் பேசும்போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தற்போது ஒன்றிய அரசு 125 நாட்களாக மாற்றி உள்ளது இந்த திட்டத்தை அதிமுக ஆட்சி வந்தால் 150 நாட்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி யார் உறுதியளித்துள்ளார் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் இன்று இருந்த பெயரை ஜி ராம்ஜி என்று மாற்றியுள்ளதற்கு எடப்பாடி யார் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார் எடப்பாடி யார் அறிவித்துள்ள திட்டங்களால் பயந்த திமுக அரசு இரவோடு இரவாக ஐந்தாயிரம் ரூபாய் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பெண் அதிகாரமடைதல் கோஷமல்ல.. பொறுப்பு... ! மாணிக்கம் தாகூர் எம்.பி திட்டவட்டம்..!
ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற காலத்திலிருந்து இதுவரை தாமதமாக வழங்கிய வகையில் 41 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்க வேண்டிய உள்ளது. அதனை வழங்க வேண்டும் என்று நீங்கள் கேட்க வேண்டும் உங்கள் பணத்தை எடுத்து உங்களுக்கு வழங்குகிறார்கள் இதற்கு மயங்காமல் நீங்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 200 பெண்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர் எம்.டி.சேகர் தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: முதலமைச்சருக்கு நன்றி கூறும் மகளிர்... அறிவாலயத்தில் 5000 ரூபாயுடன் கொண்டாட்டம்..!