தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆவடி அயப்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனைக்கு தயாராக வைத்திருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு கடந்த மே 10ஆம் தேதி பொறுப்பேற்றது. அரசு பொறுப்பேற்ற உடனேயே மாநிலம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாக முதலமைச்சரால் நேரடியாக அமைக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்தப் பிரிவினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரகசிய தகவல்களின் அடிப்படையில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையை அடுத்த ஆவடியின் அயப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது வீட்டில் இருந்து மொத்தம் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: வீட்டிற்குள் தவெக ஆதரவாளர் செய்த பகீர் காரியம்... ஸ்டன் ஆன சென்னை... தட்டித்தூக்கிய போலீஸ்..!!
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இந்த கஞ்சா ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது என்பது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: திருவான்மியூர் ரெய்டு..! வீட்டில் சிலிண்டர் ஸ்டாக்… அதிர்ச்சி தகவல்!