இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் உலக அளவில் எரிவாயு விநியோகத்தை பாதித்த நிலையில், இந்தியா முழுவதும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு அச்சம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் மற்றும் வணிக சிலிண்டர்களுக்கு தேவை அதிகரித்தது. சிலர் இந்த சூழலை பயன்படுத்தி சிலிண்டர்களை பதுக்கி, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்க முயன்றனர்.
இதனை தடுக்க தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தமிழக அரசு தெளிவான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. எல்பிஜி சிலிண்டர்களை பதுக்குவது அல்லது கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கடும் குற்றமாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டது.

முக்கியமாக, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தமிழகத்தில் சிலிண்டர் பதுக்கலுக்கு எதிரான மிக கடுமையான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.இந்த எச்சரிக்கைக்கு பின்னர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிரடி சோதனைகள் நடைபெற்றன. மதுரையில் மார்ச் மாதத்தில் முதல் முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது.
இதையும் படிங்க: இதுதான் நீங்கள் செலுத்தும் 'தேர்தல் பில்'! வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை சாடிய ராகுல் காந்தி!
இது தமிழகத்தில் சிலிண்டர் கள்ளச்சந்தைக்கு எதிரான முதல் பெரிய அதிரடி நடவடிக்கையாக அமைந்தது. இந்த நிலையில், சென்னை திருவான்மியூரில் வீட்டில் சட்ட விரோதமாக சிலிண்டர்கள் பதுக்கி வைத்திருந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை செய்தபோது, 40 சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த நீலமேகம் மற்றும் குமார் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலிண்டர்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: விடிந்ததுமே அதிர்ச்சி... கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு... எவ்வளவு தெரியுமா?