சேலம், தர்மபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தலைமை அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் புற நோயாளிகளாகவும் சுமார் ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மனநல நோயாளிகள் சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 22 வயது இளம்பெண்ணிடம் தனியார் ஒப்பந்த காவலாளி பழனிவேல் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இரவு தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணின் உதட்டில் முத்தம் கொடுத்தோடு, தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து இளம்பெண்ணின் தாத்தா அளித்த புகாரின் பேரில் சேலம் அரசு மருத்துவமனை புறகாவல் நிலைய போலீசார் , விசாரணை மேற்கொண்டு, காவலாளி பழனிவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் சேலம் அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
இதையும் படிங்க: சிறுமி வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி... வடமாநில இளைஞரை வெளுத்து வாங்கிய மக்கள்...!
இதையும் படிங்க: வீட்டில் தனியாக இருந்த பெண் விஆர்ஓ முன்பு நிர்வாண கோலம்... தாசில்தாரை வெளுத்து வாங்கிய குடும்பத்தினர்...!