தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் மருத்துவத் துறைகளில் தனது தனித்துவமான பங்களிப்புகளால் அறியப்படும் எச். வி. ஹண்டே, ஒரு மருத்துவர், அரசியல்வாதி, எழுத்தாளர் எனப் பலதரப்பட்ட திறமைகளைக் கொண்டவர். 1927 நவம்பர் 28 அன்று கோயம்பத்தில் பிறந்த இவர், தனது வாழ்நாள் முழுவதும் சமூக சேவையை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வந்தார்.
அரசியல் வாழ்க்கை, ஹண்டேவின் வாழ்க்கையின் மற்றொரு முக்கிய அத்தியாயம். தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் தனது நேர்மறை உணர்வால் பிரபலமானார். 1980இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) இணைந்து அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் 699 வாக்கு வித்தியாசத்தில் மு. கருணாநிதியிடம் தோல்வியடைந்தார். இருப்பினும், 1980 முதல் 1987 வரை எம்ஜிஆர் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகப் பணியாற்றினார்.

பின்னர் பாஜகவில் அவரது அரசியல் பயணம் தொடர்ந்தது. 2006இல் பாரதீய ஜனதா கட்சியின் (பாஜக) வேட்பாளராக அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு, 9,000 வாக்குகளைப் பெற்றார். இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போது பாஜகவிலும் உள்ள எச்.வி.ஹண்டே வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: சேலத்துக்காரங்க பின்றாங்களே.. ப்பா..!! அண்ணாமலைக்கு ரசிகர் மன்றமா..!!
பெண்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. திமுக அரசின் திட்டங்கள் தொடர்பாக ஹண்டே தொடர்ந்து கடிதங்கள் எழுதி வந்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஹண்டேவை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது... பாஜகவுக்கு சவால் விட்ட உதயநிதி..!