தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ் டூ மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மாணவி பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் வீட்டிலிருந்து அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்காக தனியாகச் சென்றுள்ளார்.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகும் திரும்பாததால், பெற்றோரும் உறவினர்களும் தேடியபோது கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் முகத்தில் பலத்த காயங்கள், சிதைவுகள் இருந்ததுடன், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்ததாக கூறப்பட்டுள்ளது. கொலை மிகவும் கொடூரமான முறையில் நிகழ்த்தப்பட்டிருப்பதாக கிராம மக்களும் உறவினர்களும் குற்றம் சாட்டினர்.

மாணவி காணாமல் போனதை அறிந்த பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். ஆனால், அங்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், புகாரை ஏற்க மெத்தனமாக நடந்து கொண்டதாகவும், காவல் ஆய்வாளர் அவதூறாகப் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கோபமடைந்த பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பிளஸ் டூ மாணவி கொடூர கொலை... அவ்வளவும் அலட்சியம்..! இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..!!
மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் சூழ்நிலையில் குற்றவாளிகளை பிடித்து மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டு உள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலையில் அதிரடி திருப்பம்... மூன்று பேரை கொத்தாக தூக்கிய காவல்துறை...!