ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குஈரான் பாதுகாப்பு படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றன. ஒருபோதும் சரணடைய மாட்டோம் என ஈரான் சூளுரைத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகளின் முக்கிய நிலைகளை குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இஸ்ரேலும் அமெரிக்காவும் போட்டி போட்டு தாக்கினாலும் எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து பதிலடி கொடுக்கப்படுகிறது. இஸ்ரேலும் இடைவிடாமல் தாக்கிக் கொண்டிருக்கிறது. ஈரானும் அதற்கு ஈடு கொடுத்து வருகிறது.
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாததை அடுத்து ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருக்கிறது என்று குற்றம் சாட்டி அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுக்க ஆரம்பித்தது. இந்த தாக்குதலானது நான்காவது நாளாக தொடர்ந்திருக்கிறது. ஈரான் தரப்பிலிருந்து தற்பொழுது ஒருபோதும் நாங்கள் சரணடைய மாட்டோம் என்ற சூளுரையானது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தொடர்ச்சியான பதிலடி உறுதியாக கிடைக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றது ஈரான்.
ஈரானினுடைய முக்கிய தளபதியான காமெனி உள்ளிட்டவர்கள் எல்லாம் வீழ்ந்தப்பட்டனர். ஆனாலும் கூட ஈரான் இன்னும் வீழ்ச்சி அடையவில்லை. தொடர்ச்சியாக தங்களுடைய ஆயுதங்கள் மூலமாக அவர்கள் தற்காப்பு போரிலும் ஈடுபடுகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் பதிலடி தாக்குதல் என்கின்ற பெயரிலே வளைகுடா நாடுகளுக்குள் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் அடுத்தடுத்து செலுத்தி வருகின்றார்கள்.
இதையும் படிங்க: ஆபத்து..ஆபத்து...!! - உலகமே அஞ்சிய முடிவை எடுத்த ஈரான்... மூடப்பட்டது ஹார்மூஸ் நீரிணை...!
ஒரு பக்கம் ஒவ்வொரு நாளிலும் ஈரான் வீழ்ச்சி அடைந்து கொண்டே இருக்கின்றது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினுடைய படைகள் வலிமை அடைந்து கொண்டே இருக்கின்றது என்று அமெரிக்காவினுடைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து வருகிறார். அதே சமயத்தில் மற்றொரு பக்கம் ஈரானை பொறுத்தவரை எங்களுடைய ஆயுத கிடங்கில் இன்னும் ஆயுதங்கள் இருப்பு இருக்கின்றன. ஆயுதங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை என்று சொல்லும் விதமாக தங்களிடம் இருக்கக்கூடிய ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை எல்லாம் கொண்டு தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்பொழுது ஒருபோதும் சரணடைய மாட்டோம் என்கின்ற ஒரு நிலைப்பாட்டை வெளியிட்டிருக்கின்றது ஈரான் அரசு. ஈரான் மீதான இஸ்ரேலியனுடைய தாக்குதலுக்கு ஈரானினுடைய பாதுகாப்பு படைகள் குறிப்பாக ஈரானில் இருக்கக்கூடிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படை என்று சொல்லப்படக்கூடிய அமைப்பினர் தொடர்ந்து தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஈரானுக்கு ஆதரவாக ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் இருக்கக்கூடிய சில யுத்த குழுவினரும் இந்த போரில் பங்கெடுக்க முன்வந்திருக்கின்றார்கள் . எனவே சுற்றிலும் வட்டமிட்டு இஸ்ரேலை குறி வைத்து அவர்கள் தாக்க தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இஸ்ரேல் நடத்தக்கூடிய அந்த தாக்குதலை முறியடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது.
அதே நேரம் வளைகுடா பகுதியில் இருக்கக்கூடிய அமெரிக்க நிலைகளை தொடர்ந்து குறிவைத்து தாக்குவோம் என்கின்ற தகவலையும் ஏற்கனவே ஈரான் வெளியிட்டிருந்தது. எங்களால் அமெரிக்காவினுடைய நிலப்பரப்பை தாக்க முடியவில்லை என்றால் எங்களை சுற்றி இருக்கக்கூடிய நிலப்பரப்பில் எங்கே எல்லாம் அமெரிக்கா படை வைத்திருக்கின்றதோ அதையெல்லாம் நாங்கள் தாக்குவோம் என்பதுதான் ஈரானினுடைய நிலைப்பாடாக இருந்து வருகின்றது. எனவே இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகளில் முக்கிய நிலைகளை குறிவைத்து ஈரானினுடைய ஏவுகணைகளும் ட்ரோன்களும் அடுத்தடுத்து பாய்ந்து கொண்டே இருக்கின்றன.
இஸ்ரேலும் அமெரிக்காவும் போட்டி போட்டு தாக்கினாலும் எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றோம் என்று ஈரான் உலக அரங்கிற்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கின்றது. எங்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் தகுந்த பதிலடி உண்ட, எதிரிகள் உரிய விலையை கொடுத்தே ஆக வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை தீர்க்கமான தன்னுடைய கருத்தை ஈரான் முன்வைத்துள்ளது.
இந்த சண்டையை பொறுத்தவரை, ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான சண்டை என்பது எப்படி எந்த தரப்பிற்கும் இறுதி வெற்றி கிடைக்காத ஒரு சண்டையாக நீண்டு கொண்டே போகின்றதோ, அதேபோன்று ஈரான் மற்றும் அமெரிக்க இஸ்ரேல் நாடுகளுடனான இந்த மோதல் போக்கும் நீண்டு விடுமோ என்றே அச்சம் நிலவுகிறது. ஏனெனில் அந்த அளவிற்கு ஒவ்வொரு நாளும் புது புது ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதனிடையே எதற்கும் அஞ்சமாட்டோம் என்றும், ஒருபோதும் சரணடைய மாட்டோம் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது உலக அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: உயிர் நாடியில் கை வைத்த ஈரான்... உருவாகிறதா 3ம் உலகப்போர்?... உச்சக்கட்ட பதற்றத்தில் உலக நாடுகள்...!