தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து இயங்கும் முக்கிய கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ வரும் 2026 ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கடந்த 2025 நவம்பர் மாத இறுதியில் சென்னையில் நடந்த மாநில உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் வெளியிடப்பட்டது.
இந்த போராட்டத்தின் முக்கிய காரணம் திமுக அரசு 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஆகும். குறிப்பாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது முதன்மையான கோரிக்கையாக உள்ளது. 2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு அமலில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் பயனற்றது எனக் கூறி அதை ரத்து செய்ய வலியுறுத்துகின்றனர். இதுதவிர, ஊதிய முரண்பாடுகளை சரிசெய்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குதல், உரிய பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.
போராட்டத்திற்கு முன்னதாக ஜாக்டோ-ஜியோ பல கட்ட போராட்டங்களை நடத்தியது. டிசம்பர் 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம், டிசம்பர் 27-ம் தேதி ஆயத்த மாநாடுகள் மற்றும் கருப்புச் சின்னம் அணிதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. டிசம்பர் 22-ம் தேதி அமைச்சர்கள் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பிறகு, போராட்டத்தை உறுதிப்படுத்தினர்.
இதையும் படிங்க: வாக்குறுதி என்னாச்சு?.. 13 வருஷமா WAIT பண்ணுறோம்... ஆசிரியர் பணிக்காக காத்திருப்போர் போராட்டம்...!
அரசு ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ளர்களையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ஜாக்டா ஜியோ நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சர்கள் கூறியுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். முதலமைச்சர் வெளியிடும் அறிவிப்பை பொறுத்து வரும் 6 ஆம் தேதி ஸ்ட்ரைக் நடைபெறுமா இல்லையா என்பது தெரியவரும் என்று கூறினர். அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் இவ்வாறு கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆசிரியர் கையை போலீசார் உடைத்த புகார்... கடும் அதிருப்தி... சக ஆசிரியர்கள் தர்ணா...!