கள்ளக்குறிச்சி அருகே உள்ளது மலைக்கோட்டாலம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவர் அவரது இரண்டாவது மனைவி லட்சுமியுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் லட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கராசு என்பவருக்கும் திருமணத்தைக் கடந்த உறவு இருந்ததாக கொளஞ்சிக்கு தெரிய வந்திருக்கிறது.
கொளஞ்சி வீட்டு மொட்டை மாடியில் இருவரும் தனிமையில் இருந்த போது அதனை அவர் பார்த்துவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கொளஞ்சி தனது இரண்டாவது மனைவி லட்சுமி மற்றும் அவருடன் உறவில் இருந்து வந்த தங்கராசு இருவரையும் கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் இருவரும் கழுத்தறுபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து இருவரது தலையையும் எடுத்துக் கொண்டு கொளஞ்சி தலைமறைவாகியுள்ளார்.
து குறித்து தகவல் அறிந்த வரஞ்சரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களது உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கொளஞ்சி அவரது இரண்டாவது மனைவி மற்றும் அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த தங்கராசை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உதயநிதி பேசியது உண்மைதான்! எந்த தப்பும் இல்ல... டிடிவி தினகரன் பரபரப்பு பிரஸ்மீட்
குற்றவாளி மற்றும் இறந்தவர்களின் தலைகளை வரஞ்சரம் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
இதையும் படிங்க: சோணமுத்தா போச்சா... பைக் திருட சென்ற இடத்தில் 2 லட்ச ரூபாய் பைக்கை இழந்த திருடர்கள்...